யாழில் பிரதேசபை பெண் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!! எதற்காக? (Photos)
வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்
ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை
உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக பாதிப்புகளின்றித்
தப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் உடுவில் கந்தேரோடை பகுதியில் இன்று இரவு 8.25 மணியளவில் இடம்பெற்றது.

