புதினங்களின் சங்கமம்

பளையில் கோடிக்கணக்கான பெறுமதியான கஞ்சா மீட்பு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசார் பகுதியில்  105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார் 14 கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர் அவற்றின் பெறுமதி சுமார் 105 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில்,  பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.