புதினங்களின் சங்கமம்

மாணவியுடன் சேட்டை விட்டவருக்கு உயர் பதவி வழங்கிய ஆளுநர்! ஆளுநர் அலுவலகத்திலிருந்த துரத்தப்படும் உத்தியோகத்தர்கள்!!

வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் ஜே.வி.பி அரசியல்வாதிகளின் பூரணகட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகவும் ஆளுநரர் ஜே.வி.பியின் கைப் பாவையாக இயங்கின்றார் எனவும் அவர் சுயமாக எந்த ஒரு முடிவும் எடுத்தச் செயற்பட முடியாதவராக உள்ளார் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

1) ஆளுநர் அலுவலகம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிய சில பதிவுகளின் சாராம்சத்தை இங்கு தந்துள்ளோம்.

யாழ் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி பயிலும் 13 வயதான  மாணவியுடன் சேட்டை விட்ட ஆசிரியருக்கு வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பதவி ஒன்றை வழங்கியுள்ளார்.

ஜேவிபியின் ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளராக இருந்த காலத்தில் வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியுடன் குறித்த ஆசிரியர் சேட்டை விட்டது பாடசாலை முழுவதும் அறிந்த விடயம்.

ஆனால் கட்சி அரசியலுக்குள் சிக்கி உள்ள வடமாக ஆளுநர் வேறு வழியின்றி குறித்த ஆசிரியருக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் சங்க தலைவராக பதவி வழங்கியுள்ளார் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

2) ஆளுநர் அலுவலகத்தில் தற்போததைய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு வேலை செய்த சகல அரச அலுவலர்களும் துரத்திக் கலைக்கப்படுவதாகவும் அதே வேளை இடமாற்றம் வந்த ஒரு சில அலுவலர்களை ஆளுநர் அலுவலகம் இடமாற்றத்தை இரத்துச் செய்து அவர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளது எனவும் இடமாற்றக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என கூறும் ஆளுநர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஆளுநர் அலுவலகத்தில் தற்போது இடமாற்றக்கட்டளைகளை மீறி தரித்து நிற்கும் குறித்த அலுவலர்கள் தமிழரசுக் கட்சியின் நெருங்கிய ஆதரவாளர்கள் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.