புதினங்களின் சங்கமம்

யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி பச்சைக் கள்ளன்! ”கோல் எடுக்க எடுக்க கட் பண்ணினான்” – நடந்தது என்ன?

யாழ் போதனா வைத்தியசாலை முன்னாள் ஊழியர் ஜெயசந்திரன் வீட்டில் தேங்காய் வீழ்ந்து தலையில் காயமடைந்தார். மாலை 4 மணிக்கு காயமடைந்த அவர் மலை 4.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார். கொண்டு செல்லும்வரை அவர் சுயநினைவுடன் கதைத்தவாறே சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 4.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற அவரை போதனா வைத்தியசாலையில் உள்ள CT Scanner வேலை செய்யவில்லை எனக் கூறியதுடன் மந்திகைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறி கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் இல்லை என சர்வசாதாரணமாக கூறிவிட்டு அசண்டையீனமாக இருந்துள்ளார்கள் பொறுப்புவாய்ந்த வைத்தியர்கள். இது தொடர்பாக பணிப்பாளா சத்தியமூர்த்தியை ஜெயச்சந்திரனின் உறவுகள் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது உறவின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிய போது சத்தியமூர்த்தி எந்தவித பதிலும் கூறாது தொலைபேசியை கட் பண்ணிவிட்டதாக வெளிநாட்டிலுள்ள உறவுகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்கள். அதன் பின்னர் ஜெயச்சந்திரனுடன் போதனா வைத்தியசாலையில் வேலை செய்த சில நட்பு ஊழியர்களிடம் உறவுகள் தொடர்பு கொண்ட போது ஜெயச்சந்திரனை மந்திகைக்கு அனுப்புவதற்கு பொறுப்பான வைத்தியர்கள் எவரும் தற்போது கடமையில் இல்லை எனவும் அவர்கள் தனியார் வைத்தியசாலையில் தற்போது கடமையில் உள்ளார்கள் எனவும் பதிலளித்துள்ளார்கள். தொடர்ச்சியாக சத்தியமூாத்திக்கு தொலைபேசி எடுத்த போதும் சத்தியமூர்த்தி தொலைபேசியில் பதில் அளிக்கவே இல்லை என உறவுகள் அதிர்ச்சித்தகவலை கூறுகின்றார்கள். அத்தடன் போதனா வைத்தியசாலையில் ஜெயச்சந்திரனுடன் நின்ற உறவுகள் நேரில் சத்தியமூர்த்தியைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் குறித்த உறவுகளை சந்திக்காது தவிர்த்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதன் பின்னர் சர்வசாதாரணமாக அங்கு இரவு பத்துமணி போல் வந்து தற்போது நேரம் போய் விட்டது. இனி எந்தவித சிகிச்சையும் ழங்க முடியாது என வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவு ஒரே ஒரு ஸ்கானருடன் செயற்படுவது உட்பட இந்த அளவு மோசமான நிர்வாகத்தை வைத்துக் கொண்டு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் என்ன புடுங்குகின்றார்?

எந்தவித சிகிச்சையும் கொடுக்காது, ஜெயச்சந்திரன் இனிமேல் உயிர் பிழைக்க முடியாது அவரது மூளை செயலிழந்துவிட்டது என கூறி அவரது சிறுநீரகத்தை  பெறுவதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் தரப்பு பெரும் முயற்சி எடுத்தள்ளதாகத் தெரியவருகின்றது. பச்சைக்கள்ளனான சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுநீரகத்தை வைத்தும் வியாபாரம் நடாத்துகின்றானா ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆயுள்கால பணிப்பாளாராக இருந்துகொண்டு போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய பல சமூக அமைப்புக்களை நிறுவி புலம்பெயர் தேசத்திலிருந்து அப்பாவிகளிடமிருந்து பெருமளவு பணத்தை சுரண்டி கோடிக்கணக்கான ரூபாய்களை ஆட்டையைப் போட்ட பச்சைக் கள்ளனான சத்தியமூர்த்தி தனது குட்டுக்களை அம்பலப்படுத்தும் மற்றொரு விசரனான பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் வாயை அடைப்பதற்கு சட்டத்ததரணிகள் மூலம் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் நடைபெறும் மருத்துவத் தவறுகள் மற்றும் முறைகேடுகளையாவது திருத்துவதற்கு ஒருவன் தேவை என நினைத்தே அருச்சுனா என்ற முழு விசரனை யாழ்ப்பாண மக்கள் எம்.பியாக தெரிவு செய்திருந்தனர். அந்த மென்டல் தற்போது திசை மாறி விசர்க்கூத்தாடித் திரிகி்ன்றது.

முன்னைய பதிவு

யாழில் சிறுநீரகம் பெறுவதற்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா யாழ் போதனா வைத்தியசாலை ஓய்வு உத்தியோகத்தர் ஜெயசந்திரன்? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!