யாழில் சிறுநீரகம் பெறுவதற்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா யாழ் போதனா வைத்தியசாலை ஓய்வு உத்தியோகத்தர் ஜெயசந்திரன்? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!
யாழ் கோப்பாய் வடக்குப் பகுதியில் தென்னையிலிருந்து கொக்கைத்தடி மூலம் தேங்காய் பிடுங்க முற்பட்ட 60 வயதான தம்பிராசா ஜெயச்சந்திரன் தேங்காய் தலையில் விழுந்த நிலையில் காயமுற்றுள்ளார். இவர் தலையில் தேங்காய் விழுந்தவுடன் தனது மனைவியிடம் தேங்காய் தலையில் விழுந்துவிட்டது என தெரிவித்த பின்னர் தானே ஓட்டோச் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு எடுத்த பின் ஓட்டோவில் தானாகவே ஏறி யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைந்து சென்றுள்ளார். ஜெயச்சந்திரன் யாழ் போதனா வைத்தியசாலையின் நீண்ட கால உத்தியோகத்தர் ஆவார். இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூட உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இவர் ஓய்வு பெற்றார்.
தேங்காய் தலையில் விழுந்த போதும் ஜெயச்சந்திரனின் தலையில் வெளிக்காயங்கள் இல்லை என தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைந்து ஓட்டோவில் சென்ற ஜெயச்சந்திரன் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு நீண்ட நேரமாக சிகிச்சை அளிக்கப்படாது காக்க வைக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்குள் சென்ற ஜெயச்சந்திரன் தலையின் உட்பகுதியில் இரத்தம் உறைந்த காரணத்தால் மயக்கமடைந்துள்ளார். இருப்பினும் ஜெயச்சந்திரனுக்கு தலையில் ஸ்கான் செய்ய வேண்டும் எனவும் ஆனால் யாழ் போதனாவைத்தியசாலையில் உள்ள ஸ்கானர் பழுதடைந்துவிட்டது என கூறி பல மணித்தியாலங்களின் பின்னரே ஜெயச்சந்திரனை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் யாழ் போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினர். மந்திகை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையின் போது ஜெயச்சந்திரனுக்கு மூளைப்பகுதியில் குருதி உறைந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். அதன் பின்னர் ஜெயச்சந்திரன் இனி உயிர் வாழ்வது கடினம். அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்கள்.
ஜெயச்சந்திரன் உயிர் பிழைக்கமாட்டார் என உறவினர்களுக்கு கூறிய யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தரப்பினர் ஜெயச்சந்திரனின் சிறுநீரகத்தை குறி வைத்து அதனை தமக்கு தானமாகத் தருவீர்களா? என உறவினர்களி்டம் கேட்டுள்ளதாகத் உறவினர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஜெயச்சந்திரன் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் சடலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மரணச்சடங்கு நடைபெறவுள்ளது. ஜெயச்சந்திரனின் சிறுநீரகம் தானமாகக் கொடுக்கப்பட்டதா என அறியமுடியவில்லை.
ஆனாலும் மிக மிக அத்தியாவசிமாக உள்ள ஸ்கானர் பழுதடைந்த நிலையில் அதனை திருத்துவதற்கோ அல்லது வேறு ஸ்கானர்கள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கோ முற்படாத யாழ் போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி விபத்தில் பலியானவர்களின் சிறுநீரகங்களை குறி வைத்து அவற்றை பெறுவதற்கு முயல்வது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் மூலம் கொடுக்கப்படும் இரத்தவகைகளை தனியார் வைத்தியசாலைக்க விற்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சிறுநீரக வியாபாரமும் தொடங்கியுள்ளானா? என கடும் சந்தேகம் எழுந்துள்ளது.
இரத்ததானம் மற்றும் சிறுநீரகம் உட்பட்ட அவயங்களை தானம் செய்வது அது தொடர்பான நோய்கள் உடையவர்களுக்கு கடவுளின் வரம் போன்றது. அவ்வாறு தானம் செய்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஆனால் கடவுளால் கொடுக்கப்படும் கொடையை இடை நடுவில் உள்ள பூசாரி போல் இருந்து அதிலும் பணம் சம்பாதிப்பது மிகப் பெரும் ஊழலாகும். இரத்ததானம் மற்றும் அவய தானங்கள் செய்பவர்கள் சத்தியமூர்த்தி தொடர்பில் அவதானமாக செயற்படவும். யாழ் போதனா வைத்திசாலைக்கு இவ்வாறான தானங்களைக் கொடுப்பவர்கள், அத் தானங்கள் யாருக்கு செல்கின்றன என்பதை அறிந்து அவர்கள் முழுமையான பலனை எந்தவித பணமும் கொடுக்காது பெற்றுள்ளார்களா? என கண்டறிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் சத்தியமூர்த்தி பச்சைக் கள்ளன் என்பது புலம்பெயர் நாடுகளில் வாழும் அப்பாவி நன்கொடையாளர்களுக்கு தெரிந்த விடயம். ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செய்கின்றேன் என கூறி புலம்பெயர் நாடுகளில் வாழும் அப்பாவி நன்கொடையாளர்களிடமிருந்து பெருமளவு நிதியினைச் சுருட்டி அவர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்விகள் கேட்கும் போது அவர்களை தடைசெய்து வருவதும் பலரும் அறிந்த விடயமாகும்.
தற்போதும் ஸ்கானர் பழுதை திருத்த முற்படாமல் உள்ளதுக்கான காரணம் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் ஸ்கான் எடுத்து அதில் வரும் கொமிசனை பெறுவதற்காக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
வட பகுதியின் மிக முக்கிய வைத்தியசாலையான யாழ் போதனாவைத்தியசாலையில் மிக அத்தியாவசியமான ஸ்கானர் ஒன்றே ஒன்று உள்ளது தொடர்பாக சத்தியமூர்த்தி என்ன நடவடிக்கை எடுத்துள்ளான் என்பதையும் வேறு ஸ்கானர்கள் வாங்குவதற்கு NPP அரசு நிதி ஒதுக்கவில்லையா? அல்லது வடக்கு மக்களை சாகடிக்கும் செயற்பாட்டை NPP அரசு திட்டமிட்டு செய்கின்றாதா? என்பதையும் கண்டிறிவது அவசியமாகும்.
அருச்சுனா எம்.பி வெங்காயத்தோடு மல்லுக்கட்டுவதற்கு மும்முரமாக நடவடிக்கை எடுத்து திரியும் சத்தியமூர்த்தி யாழ் போதனாவைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது விசுப்புலாத்தித்தனமாக திரிவது ஏன்?

