Home புதினங்களின் சங்கமம் யாழ் தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளரின் லீலைகள்!! நடப்பது என்ன?

யாழ் தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளரின் லீலைகள்!! நடப்பது என்ன?

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ICT பாடநெறிக்கான Viva பரீட்சைக்கு வருகின்ற மதிப்பீட்டு உத்தியோகத்தர்களுக்கான (உணவு, தங்குமிடம்.போக்குவரத்து)அனைத்துக்கு என பரீட்சை எழுதும் மாணவர்களிடம் சுமார் 50,000 ரூபாய் வரை பணம் பறிக்கும் உத்தி வாட்ஸாப் மூலம் கையாளப்பட்டு வருகிறது.

குறித்த தொழில்நுட்பக் கல்லூரிக்கு குழம்பிலிருந்து வருகை தர உள்ள மதிப்பீட்டாளர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் போக்குவரத்து என்பவற்றை வழங்குகின்ற போதும் மாணவர்களிடம் பணத்தை வசூலிக்குமாறு ஒரு விரிவுரையாளரின் தூண்டுதலின் பேரில் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கலந்துரையாடல் நிகழ்ந்த போது நாங்கள் அதற்கு இணங்காததால் குழுவில் இருந்து எங்களை உடனடியாக நீக்கிவிட்டார்.

பரீட்சைக்கு முன்னர் பணத்தை வழங்காத போனால் அதில் சித்தி அடைய வைக்க மாட்டோம் என்ற மன நீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு பணம் அளவிடுகிறார்கள் என்ற எண்ணம் எங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய நபர் லதுசன் என்பவர் அவர் கூறியது “முன்னரும் மாணவர்கள் இவ்வாறு ஒத்தாசை செய்தார்கள்”
இப்படி நிகழ்வது இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். எதிர்காலங்களில் எமது பரீட்சைக்கு வருகின்ற மதிப்பீட்டாளர்கள் எம்மை சித்தியடையச் செய்யாமலும் இருக்கலாம்.எனவே இதனை கவனத்திற் கொள்ள வேண்டும் என மாணவர்கள் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.