புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கஸ்டப்பட்ட மக்களின் திருவிளையாடல்கள் இதோ!!

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கிளிநொச்சி மாவட்டம் தான் அதிகமாக வறுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருக்கின்றது என்பது வெறும் பொய் அந்த தகவல் பிழை. ஏனெனில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை இதற்காக சுட்டிக்காட்டுகிறேன்.

கடந்தவாரம் ஒரு நாள் காலை எனது தோட்டத்தில் வேலை செய்வதற்காக ஆட்களை பிடிப்பதற்கு காலை 6. 30 தொடக்கம் 9.00 மணி வரை அலைந்தேன். 18 பேரிடம் வேலைக்கு வர முடியுமா என விசாரித்தேன். 18 பேரில் ஒருவர் கூட வேலைக்கு வர சம்மதிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வேலைக்கு வர முடியாது என்பதற்கான பல்வேறு காரணங்களை கூரினர். ஒருவர் சொன்னார் தூரத்திற்கு வேலைக்கு வரமாட்டேன் என்றார். இன்னொருவர் திருவையாறுக்கு வேலைக்கு வரமாட்டேன் என்றார். இன்னும் ஒருவர் தோட்ட வேலைக்கா என நமட்டுச்சிரிப்போடு சொன்னார் தோட்ட வேலைக்கு வந்தால் அது கௌரவம் இல்லையாம் ஊருக்குள்ள கூலி வேலை என்று சொல்வார்களாம்.
இன்னும் இரண்டு பேர் ஏதாவது வேலை கிடைக்கும் என்று வைரவர் கோயில் மதிலில் உட்கார்ந்திருந்தனர் அவர்களிடம் கேட்டபோது அவர்களின் விளக்கம் சற்று வித்தியாசமாக இருந்தது. “நாங்கள் தோட்ட வேலைக்கு போக மாட்டம். கட்டிடப்பொருட்கள் ஏற்றி இறக்க அல்லது யாராவது வீடு மாறுகின்றவர்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்க இப்படியான வேலைகளக்குத்தான் போவோம். தோட்டத்தில நாள் முழுக்க நிண்டு சாகிறத விட இரண்டு மணித்தியாலத்தில் வேற வேலை செய்து அதே சம்பளத்தை உழைச்சிருவம்” என்றார்கள். இப்படியே ஒவ்வொருவரும் விளக்கமளித்தனர்.

இப்போது விடயத்துக்கு வருகிறேன். கிளிநொச்சி மாவட்டம் முழுமையாக விவசாயத்தையும் மீன் பிடியையுமே தமது வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கின்ற மாவட்டம். அப்படிப்பார்த்தால் எத்தனை பேர் விவசாய நடவடிக்கையிலும் மீன் பிடியிலும் ஈடுபடுகின்றனர். சிலர் சொல்லாம் வறட்சி அதனால் விவசாயம் செய்ய முடியாதென்று. ஆனால் கிளிநொச்சி திருவையாறு பகுதிக்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவில் ஏற்று நீர்ப்பாசணத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் திருவையாறில் மூன்றில் ஒரு பகுதி கூட விவசாய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. இதற்கான பிரதான காரணம் வேலையாட்கள் பற்றாக்குறை. தற்போது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சில விவசாயிகளும் எதிர் காலத்தில் விவசாய நடவடிக்கைகளை கைவிட தீர்மாணித்துள்ளனர். நிலைமை இப்படியே தொடருமாக இருந்தால் வறுமை இன்னும் உயரும். வறுமை ஏற்படுவதற்கு பிரதான காரணம் மக்களின் சோம்பேறித்தனமேயன்றி வேறில்லை.

2009 இற்கு முன்னர் அரசாங்கம் விவசாய உள்ளீடுகள்,விதை பொருட்கள்,விவசாய உபகரனங்கள்,எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையம் தடை செய்த போதும் கிளிநொச்சியில் இப்போதிருப்பதைப் போல வறுமை இருந்ததில்லை. ஆனால் இப்போது விவசாய நடவடிக்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தாராளமாக கிடைத்தும் கூட வறுமை தலைவரித்தாடுகிறது என்றால் பிழை எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும். உதாரணமாக சமுர்த்தி போன்ற திட்டங்கள் உழைக்கக் கூடிவர்களுக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை காரணம் காட்டி தொடர்ந்து தங்கி வாழ்வேரின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிககை எடுக்க வேண்டும்.

#குறிப்பு:- கிளிநொச்சியில் தோட்ட வேலைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
நன்றி
முகப்புத்தக பதிவு