புதினங்களின் சங்கமம்

தமிழர் பகுதியில் இந்தத் தென்னந்தோட்டங்களுக்கு நடந்தது என்ன?? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

குண்டு வீசப்படவில்லை
யாரும் எரித்தழிக்கவில்லை
யானையோ காட்டு விலங்கேதுமோ நாசமாக்கவில்லை
போரினால் அழியவில்லை
அநியாயத்தினால் – குழாய்க்கிணறுகளைக் கண்டபாட்டுக்கு அடித்ததினால் ஏற்பட்ட நாசமிது.
எங்கள் சுற்றயலிலும் இந்த மாதிரி ஏராளம் தென்னைகளும் அழிந்து பட்டுள்ளன.
அம்பாள்குளம்பகுதியில் கல் அறுத்து விற்பதற்குதேவையான தண்ணீரைப் பெறுவதற்காக ஒரு ஏக்கர் காணிக்குள் நான்கு குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றயலில் உள்ள அத்தனை கிணறுகளும் வற்றி விட்டன. தென்னை, மா உள்பட வான்பயிர்கள் அனைத்தும் அழிந்துள்ளன.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் பாழாய்ப்போன விசயங்கள் நடக்குது
வழிகாட்டலோ தலைமைத்துவமோ இல்லாத சமூகமாகி விட்டோம்.

பிரதேச செயலகம், பிரதேச சபை, சுற்றுச் சூழல் அமைப்புகள், பயிர்ச்செய்கைப் பிரிவினர் என ஆயிரம் அமைப்புகளும் அதிகார நிறுவனங்களும் உண்டு.

அரசியல் தரப்புகள் தலைவர்கள் இருக்கிறார்கள்.

இருந்தும் என்ன பயன்?

விதியே விதியே
தமிழ்ச்சாதியை என்செய்ய விழைந்தாய்….!

(Photography by M.Thamilchelvan)