புதினங்களின் சங்கமம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்ற கணவன், மனைவி, 11 மாத குழந்தைக்கும் கொரோனா!!

யாழ்.மாநகரில் வர்த்தக நிலையம் நடத்திவரும் சாவகச்சோி – மீசாலையை சேர்ந்த கணவன்
மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில்
அங்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதேவேளை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 மாதங்களான சிசு ஒன்றுக்கு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

நேற்று முன்தினம் வெளியான பீ.சி.ஆர் முடிவுகளின்படி குறித்த குழந்தைக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் நேற்றய பீ.சி.ஆர் முடிவுகளின்படி பருத்தித்துறையில் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்
ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.