புதினங்களின் சங்கமம்

கொடிகாமம் பொலிஸ்நிலைய பொலிஸ்காரன் மயூரனின் டிப்பர் செய்யும் கொடூர வேலைகள்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி தனங்களப்பு, மறுவன்புலவு, மற்றும் கச்சாய் பகுதிகளில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்காரன் மயூரன் என்பவனுக்கு சொந்தமான NP LN 2060 எனும் இலக்கத்தையுடைய டிப்பர் வாகனம் கள்ளமண் ஏற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த டிப்பர் வாகனம் கள்ளமண் கொண்டு செல்லல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வீதியில் செல்லும் போது பொலிசாரிடம் அகப்பட்டாலும் பொலிசார் அந்த டிப்பரை எந்தவித பரிசோதனைகளுக்கும் உட்படுத்தாது விட்டுவிடுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் 2 மாதத்துக்குள் ஒருவரை மோதி பலியாக்கி தப்பிச் சென்ற வாகனம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வாகனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் கள்ளமண்ணுடன் பிடிபட்ட போதும் அந்த வாகனம் உடனடியாக பொலிசாரால் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழித்துக்கட்டுவோம் என சபதம் எடுத்து களத்தில் நிற்கும் NPP அரசாங்கத்திற்கு இவ்வாறான செயற்பாடுகள் செயற்பாடு தெரியவில்லையா?

No photo description available.