புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்குள் கால்பதித்தது “டெல்டா” வைரஸ் – ஆபத்தில் வடக்கு மாகாணம்

உலகில் அதிக ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கும் பரவியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த கேரத் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு, பிலியந்தல உட்பட்ட பகுதிகளில் 19 பேருக்கு குறித்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் டெல்டா திரிபு வைரஸ்ஸால் பாரிய ஆபத்து காத்திருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.