கீரிமலை நகுலேஸ்வர ஐயரின் திருவிளையாடல்!! சிவபெருமானே அவருக்கு பயம்!! நடப்பது என்ன??

இலங்கையின் ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் பிரதம குருக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பக்தர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். ஓரிரு நாட்களுக்கு முன்னரும் தென்பகுதியிலிருந்து வந்த நீதித்துறையின் உச்ச பதவியில் இருக்கும் ஒருவர் தனது மனைவியுடன் கீரிமலைக்கு வந்துள்ளார். அவர் இலங்கையில் உள்ள 5 ஈஸ்வரங்களையும் தரிசிப்பதாக நேர்த்தி வைத்து ஏனைய ஈஸ்வரங்களுக்கு சென்ற பின் கீரிமலைக்கும் வந்துள்ளார். அதிகாலையிலேயே அவர் தனது மனைவியுடன் பாதுகாப்பு வீரர்கள் சகிதம் வந்து கீரிமலை கேணியில் குளித்துவிட்டு நகுலேஸ்வரரை தரிசிக்க கோவிலுக்கு சென்ற போது கோவில் பூட்டியிருந்துள்ளது. பல மணி நேரமாக அவர் கோவில் வளாகத்தில் கோவில் திறக்கும் மட்டும் காத்திருந்துள்ளார். அக்கோவில் எப்போது திறக்கும் என அக் கோவிலுக்கு அயலில் சென்றவர்களை கேட்ட போது நகுலேஸ்வரர் கோவில் ஐயர் ஒருவரின் தனிப்பட்ட கோவில். அவர் நினைக்கும் நேரத்தில் அதனை திறந்து அவர் பூசை செய்வார் என கூறியுள்ளனர். அத்துடன் கோவிலின் ஐயர் அருகில்தான் வசிக்கின்றார் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். உடனே நீதித்துறையைச் சேர்ந்தவரும் தனது மனைவியை அக் கோவிலின் ஐயரின் வீட்டுக்கு அனுப்பி ”கோவில் எப்போது திறப்பீர்கள் ” என கேட்பதற்காக விட்டுள்ளார். ஐயரின் வீட்டுக்குச் சென்ற மனைவியும் ”கோவில் எப்போது திறப்பீர்கள்” என கோவில் ஐயரை விசாரித்த போது ”நான் எப்பவும் திறப்பன், நீர் யார்? நீரோ எமக்கு சம்பளம் தாறனீர்… என தெனாவட்டாக கேட்டதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்தவரிடம் மனைவி கூறியுள்ளார். அவரும் பொறுமையாக பல மணி நேரம் காத்திருந்து கோவில் திறந்தவுடன் கும்பிட்டுவிட்டு அருகில் உள்ளவர்களிடம் கோவில் ஐயரின் செயற்பாட்டை கூறி கவலைப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

நகுலேஸ்வரம் கோவில் ஐயர் யாழ்ப்பாணத்தில் யார் அரசியல்ரீதியில் முக்கியஸ்தர்களாக இருக்கின்றார்களே அவர்களின் ஆதரவுடன் பல அட்டகாசங்களை அப்பகுதியில் செய்து வருகி்றார். கோவிலுக்கு அருகில் ஆறுதிருமுருகனால் கட்டப்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கும் பல அலங்கோல வேலைகளைச் செய்து வருகின்றார். அத்துடன் வலி வடக்கு பிரதேச சபையால் கீரிமலைக் கேணி புனரமைப்பு செய்வதற்கு ஆயத்தமாகிய போது ஐயர் வடக்கு மாகாண அரசியல்வாதியான அங்கஜனைக் கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளார். அங்கஜனுக்கு மக்களின் செல்வாக்கு தேவையில்லை. ஏனெனில் அங்கஜன் தேர்தல் காலத்தில் வேலைவாய்ப்பு, வீட்டுத்திட்டம் என “பேய்க்குப் பேன்பார்த்த“ யாழ்ப்பாணச் சனங்கள் பலதை ஏமாற்றி வாக்கைப் பெற்றுவிடுவார். மக்களி்ன் விருப்பு வெறுப்புகளுக்கு மாறான அலங்கோல வேலை செய்யும் ஐயருடன் அங்கஜன் ஒன்றினைந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளது. தற்போதைய கீரிமலை நிலவரப்படி நகுலேஸ்வரப் பெருமான் ஐயருக்குப் பயந்து கருவறைக்குள்ளேயே பதுங்கியிருக்கின்றாரா தெரியவில்லை……….

வம்பனின் வம்பு தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)