நெடுந்தீவு பிரதேசசபைக்கு துடிப்பான புதிய செயலாளர்!!
நெடுந்தீவுப் பிரதேசசபைக்கு துஜீஸ்காந் புஸ்பராஜா எனும் துடிப்பு மிகுந்த புதிய செயலாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தொடர்பாக நெடுந்தீவு பிரதேசசபை வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஏனைய செயலாளர்கள் நெடுந்தீவில் நியமனம் செய்யப்படும் போது அவர்கள் நெடுந்தீவுக்கு கடமைக்கு வருவதை துன்பியல் நிகழ்வாக நினைத்தே கடமையில் ஈடுபட்டார்கள். ஆனால் தற்போது புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செயலாளர் நெடுந்தீவில் தங்கியிருந்து சேவை செய்ய முற்பட்டுள்ளதுடன் தனது குடும்பத்தையும் நெடுந்தீவில் வீடு ஒன்று எடுத்து தங்க வைக்கவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் புதிய செயலாளர், நெடுந்தீவு பிரதேசசபை அலுவலகத்தை சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன் பின்னர் நெடுந்தீவு அபிவிருத்தியில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் பிரதேசசபை வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

