புதினங்களின் சங்கமம்

யாழில் நள்ளிரவு அக்காவை கட்டி வைத்த பின் தம்பியை கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம்! நடந்தது இதுதான்!

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1 ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் இன்று (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், “நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டிப் போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார்” எனக் கூறியுள்ளார்.

பின்னர் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனைகளின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த நபரின் சகோதரியான பெண்தான் கூறியது பொய் என்றும், நகைகளை மறைத்து வைத்ததாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.