Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பில் 27 வயது குடும்பஸ்தர் ராஜ்குமார் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பில் 27 வயது குடும்பஸ்தர் ராஜ்குமார் சடலமாக மீட்பு!

மாத்தளன் நந்திக்கடல் களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (05.05.2025) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். அதனையடுத்து உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்றையதினம் நந்திக்கடல் களப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில் ராஜசீலன் ராஜ்குமார் எனும் அம்பலவன் பொக்கணையை சேர்ந்த 27 வயதுடைய ஆறுமாத பெண் குழந்தையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று உடற்கூற்று பரிசாதனை செய்த பின்னர் உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.