இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.
அபிசன் கும்பல் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் மட்டும் சம்மந்தப்படவில்லை. இவர்கள் மணல் கடத்திலிலும், பாடசாலை சிறுமிகளை மயக்கம் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
KTM bike, மணல் கடத்தல் ரிப்பர் என சுற்றித்திரியும் இந்தக் கும்பல் சமூக வலைத்தளங்களினூடாக பாடசாலைச் சிறுமிகளை மயக்குவது, பின்னர் அவர்களை தனி இடங்களில் சந்திப்பது என பல வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களின் வலையில் சிக்கிய ஒரு பாடசாலைச் சிறுமி தொடர்பான தகவலை அவர்களின் பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபருக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். சிறுமியின் பெற்றோரிடம் தகவலை தெரியப்படுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அந்தச் சிறுமி தொடர்பான முறைகேடான படங்கள் ஏதும் இந்தக் கும்பலிடம் இருந்தால் பேராபத்து.
கிளிநொச்சிப் பெற்றோர்கள் உடனடியாக உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் தொலைபேசியை ஆய்வு செய்து, சமூக வலைத்தளங்களை நிரந்தரமாக மூடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
18 வயதிற்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்கள். அவர்கள் விரும்பியே காதல் உறவில் ஈடுபட்டாலும் சரி, போதைப் பொருள் பயன்படுத்தினாலும் சரி, அது சிறுவர் தஸ்பிரயோகத்திற்குள் தான் வரும்.
இவ்வாறு சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் வன்முறைக் கும்பல்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு கல்விச் சமூகம் பலமற்று இருப்பது பேராபத்து. இப்படியான சமூக விரோதிகளை தனித்தனியாக எதிர்கொள்ளாமல், குழுவாக எதிர்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். நடவடிக்கை எடுக்க பின்னடிக்கும் அரசு மீது சிவில் சமூகங்கள் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.





