நுவரேலியாவில் மரத்திலிருந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் கீழே வீழந்து பலி!!
நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ தோட்டத்தில் நேற்று இரவு (26) பொன்னர் சங்கர் நாடகம் நடைபெற்றுள்ளது.
இரவு முழுவதும் பல்வேறு நாடகத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்று இன்று காலை நாடகத்தை நிறைவு செய்யும் வகையில் 60 அடி உயரம் கொண்ட மரத்தில் ஒருவர் ஏறி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொழுது மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் 60 வயது உடைய 3 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இறந்தவரின் சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

