புதினங்களின் சங்கமம்

யாழ் விபத்தில் பங்குச்சந்தை முகாமையாளர் திலீபன் பலி!! (Photos)

இன்று மாலை யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ் மாவட்ட பங்குச்சந்தை முகாமையாளரான முத்துக்குமாரசாமி திலீபன் என்பவர் மரணமாகியுள்ளார்.

 

யாழிலிருந்து பருத்தித்துறை நோக்கிய வந்துகொண்டிருந்த வானின் ரயர் காற்றுப் போனமையால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால், மோட்டார் சைக்கிளில் வந்த திலீபன் காயமடைந்தார். இதையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார்.

Image may contain: 1 person, standing