புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளித்துக்கொண்டிருந்த உடையார்கட்டு பெண்களை கடல் அலை இழுத்துச் சென்ற பயங்கரம்!

முல்லைத்தீவு – நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர். குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய யுவதியை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா எனும் யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாகனத்தையும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

May be an image of 3 people and text that says "சிவகுமார் வினுஷிகா"May be an image of 16 peopleMay be an image of 10 people

May be an image of horizon, beach and oceanMay be an image of 11 people, beach and water