நோர்வேயைச் சேர்ந்த ஊத்தை சேது என்றழைக்கப்படும் நடராஜா சேதுரூபனுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணத்தில் உள்ள பல நபர்களை அச்சுறுத்தி கப்பம் வாங்கியமை, தனிப்பட்ட நபர்களை இணையத்தளங்களில் போலியான செய்திகளை, புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்றுக் கொண்டமை, பாலியல்மோசடிகள் போன்றவற்றை அமைச்சர் விஜயகலாவின் அடியாளாக இருந்து கச்சிதமாக நிறைவேற்றி வந்த ஊத்தை சேது என்பவன் எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான். இன்று பிற்பகல் குறித்த சந்தேக நபர் பதில் நீதவான் எம்.சிவபாலசுப்ரமணியம் அவர்கள் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டான். அப்போது இவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட போது நீதிவானிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் வெளியே வந்த போது அழுததாகவும் தெரியவருகின்றது.
