கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (30) காலையில் 70 வயதான தாயும், 34 வயதுடைய மகனின் சடலமும்
வீட்டுக்குள் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதத்தால்
அவர்கள் வெட்டப்பட்டு, இரத்த வெள்ளத்தில் சடலங்களாக காணப்பட்டனர். அவர்கள்
கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


![]()





