Home புதினங்களின் சங்கமம் யாழ் யன்னார் வீதியில் பள்ளமடு சந்திக்கு அருகில் வாகன விபத்து! ஒருவர் பலி!

யாழ் யன்னார் வீதியில் பள்ளமடு சந்திக்கு அருகில் வாகன விபத்து! ஒருவர் பலி!

​

மன்னார், யாழ்ப்பாணம் பிரதான வீதி பள்ளமடு பகுதியில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் நேற்றை திங்கட்கிழமை (12
10.2026) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பஸ் ஒன்று பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது பஸ்சில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments