யாழ்ப்பாண இளைஞன் சயந்தன் சுவிசில் நீரில் மூழ்கி மர்ம மரணம்!! கொலையா என சந்தேகம்!!
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொலதூன் மாநிலத்திலுள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த சயந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
நண்பர்களுடன் நீர்த்தேக்கம் ஒன்றில் குளிக்கச் சென்ற வேளையில் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும், சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய நிலையில் அண்மையில் அவருக்கு தற்காலிக குடியுரிமை கிடைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதுவொரு கொலையா அல்லது தற்செயலாக நடந்த விபத்து சம்பவமாக என்பது தொட்பில் சுவிஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

