தேசிய மக்கள் சக்தியின் யாழ்பாண வெற்றி இயல்பானது ! ஆனால் களவாடப்பட்ட சங்கு ஏன் தோற்றது ?
மூத்த ஊடகவியலாளரின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண வெற்றி இலங்கையின் “System Change” உடன் நேரடித் தொடர்பு உள்ளது. போலித் தமிழ்த்தேசியத்தை சாதாரண தமிழ் மக்களுக்கு உறைக்கும்படி கூறிவிட்டு பெரு ந் தேசியவாத த் தி ன் அடிவருடிகளாகவும் முகவர்களாகவும் கைக்கூலிகளாகவும் யாழ்ப்பாணத்தில் இயங்குவோரின் வழிகாட்டலையும் ஏற்று அத்தகையோரின் வலைக்குள் தெரிதுகொண்டே சிக்கிய ” சங்குத் திருடிகள்” முற்றாகவே மண்கவ்வினர்.
தமிழ்க் கட்சிகளின் பிளவுகள்,பிரிவினைகள், குத்து வெட்டுக்கள், குளறுபடிகள், போலித்தனங்கள், கைக்கூலித்தனங்களால் வெறுப்பும் விரக்தியும் வேதனையும் அடைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள், நாட்டில் முற்போக்கான அரசியல்- பொருளாதார மாற்றத்தையும் கருதி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.
அத்துடன் அவ்வெற்றிக்காக உழைத்த எங்கள் உள்ளூர்த் தோழர்களின் கடின உழைப்பு மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரின் கடின உழைப்பின் நீண்டகால விளைவே இந்த வெற்றி !
மிக்க மகிழ்ச்சி !
ஆயினும் ஏனைய தமிழ் வேட்பாளர்களை நீர்த்துப் போகச் செய்த 3 புலம்பெயர்வாளர்களையிட்டும் அவர்களின் ஊடகங்களையிட்டும் அந்த ஊடகங்களில் வேலை செய்பவர்கள் (உணவு சமைப்பவர்கள் Tea makers உட்பட) பொருளாதார சமூக abuses க்கு உட்படுவதையிட்டும் நான் இன்று மிக மேலோட்டமாக கூற முனைகிறேன். இது எட்ட நின்று பார்த்த ” மங்கல் பார்வையல்ல”…..கிட்ட நின்று பார்த்த தெளிவான பார்வை. ” ஒரு நாள் உரக்க உரைப்பதற்காக இறந்த காலத்தில் மெளனிக்கச் செய்யப்பட்ட குரல் “
அதற்காக உங்கள் அகவாழ்வின் உண்மைகளை உரைத்தவர்களையும் தனிப்பட்ட விடயங்களை யும் நம்பிக் காட்டியவர் களையும் அம்பலப்படுத்துவேன் என்று ஏனையோர் அதிர்வடையவேண்டாம்.
ஆயினும் சில விடயங்களை நான் முற்றிலும் நம்புகிறேன்.
அவை வருமாறு….
“தன் முற்றத்து மண்ணையே
வியாபாரத்துக்காக
நச்சுக் கழிவுகளால்
மாசுபடுத்துபவர்
பிறர் முற்றத்தை
நேசிக்க மாட்டார் ?
தன் தாயை நேசிக்காதவர்
தன் தாய் நாட்டை நேசிக்கமாட்டார் !
தன் உடன்பிறப்புக்களை
நேசிக்காதவர்
சகோதர இனங்களை
நேசிக்க மாட்டார் !”
அந்த அறிமுகக் குறிப்புடன் நான் மேலும் தொடர்கிறேன்.
தேசிய மக்கள் சக்தி(NPP) இலங்கையின் 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்களைப்பெற்று வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைக்கிறது !
ஊழல், மோசடி, இலஞ்சம், போதைவஸ்த்து சமூகமயப்பட்டுள்ளமை, சூழல்- சுற்றாடல் நஞ்சேற்றப்பட்டு மாசடைதல், அதிகார துஸ்பிரயோகம் ( உதாரணம் : போதையில் நின்ற சுன்னாகம் பொலிஸ்காரர்கள் கைக் குழந்தையுடன் நின்ற இளம் தாயைத் தாக்கியமையும் குழந்தையை பறித்து பற்றைக்குள் ஏறிந்தமையும்) முதலியன ஒழியும் என்று நான் உறுதியாக நம்பி மகிழ்வடைகிறேன்.
தேசிய மக்கள் சக்தி ” தேசியப் பிரச்சனை” என்று அழைத்துக் கொள்ளும் ” இனப் பிரச்சனைக்கு ” தீர்வு காணும் எதிர்கால முயற்சிகளில் பேரம் பேசக் கூடிய, பங்களிக்கக் கூடிய அரசியல் விஞ்ஞான, சட்ட அறிவுள்ள தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் தோற்றுப் போயுள்ளமை மிகப் பிரதானமாக எனக்கு கவலையளிக்கிறது.
அருச்சுனா வடக்கு- கிழக்கிலுள்ள சுகாதாரத் துறையினையும் மருத்துவத் துறையினையும் தூய்மைப்படுத்துவார் எனும் நம்பிக்கை எனக்கு 100% உள்ளது.
ஆனால் G.G.பொன்னம்பலம் அவர்களின் பேரன் என்ன செய்வாரோ தெரியாது !
ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் 40 ஆசனங்களைப் பெற்றுள்ளார். அவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
மட்டக்களப்பைத் தவிர, யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் அனைத்து இடங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு இயங்கும், பொய்கள்(Lies), போலியான பகட்டுக்கள்( fake), திரிபுபடுத்தல் கள்(Manipulation), குணவியல்புப் படுகொலைகள்( Character Assassinations) ஆகியவற்றின் மூலம்
தமது இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடாகவும் தனிப்பட்டரீதியிலும் சமூக ஊடகங்களுக்கு ஊடாகவும் துர்ப்பிரசாரம் மேற்கொண்டு ,
தமிழரசுக் கட்சி யை யும் உட்பிளந்து,
மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபடாமலும்
தமிழர் தேசியவாத அரசியல் நீர்த்துப்போகவும்
தமது சுய முதலாளித்துவ நலன் களுக்காக செயற்பட்ட
தமிழர்களான புலம்பெயர் முதலாளிகள் மூவரின்
சதிவலைக்குள் அகப்பட்ட வடக்கின் தமிழ்க் கட்சிகள், குறிப்பாக ஜன நாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ( கந்தரோடையின் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் PLOTE உட்பட)
சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட ஜன நாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைபு மண்கவ்வியது.
சித்தாத்தன் அவர்களும் அவரின் தந்தையார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் யாழ். தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பெரும் சேவை ” சேரக் கூடாத கூட்டத்துடன்” சேர்ந்ததால் அரசியல் அர்த்தம் இழந்து போனது.
விடயத்தைச் சுருக்கமாகக் கூறுகிறேன். ஒரு புலம்பெயர் ஊடக முதலாளியின் கபட நகர்வை நம்பி , சங்குச் சின்னத்தை நீங்கள் திருடியமை மிகப்பெரும் வரலாற்றுத் தவறு. அதற்கு நீங்களும் திருகோணமலையின் பத்தி எழுத்தாளர் ஒருவரும் அந்த ஊடக முதலாளியை நம்பி 100% அவருக்கு ஒத்துழைத்தீர்கள்.
அரிய நேத்திரனுக்கு விழுந்த அத்தனை வாக்குகளும் உங்களால் திருடப்பட்ட சங்குக்கும் விழும் என்று நினைத்தீர்கள். அந்த திருட்டில் தான் உங்கள் தோல்வி தொடங்கியது. மக்கள் ஏமாளிகள் அல்ல !
அந்த ஊடக முதலாளி மட்டுமல்ல அவரைப் போன்ற புலம்பெயர்வாளர்கள் படிப்பறிவு, பகுத்தறிவுப் பற்றாக்குறை உள்ளவர்கள். எமது மண்ணில் 30 வருடப் போர்க்காலப் பட்டறிவும் இல்லாதவர்கள். அவர்கள் வியாபாரம் என்று வந்தால் எந்தக் குறுக்கு வழியிலும் ” தாய் முலை திருடிகள்” ஆகிவிடுவர்.
உங்கள் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்கு இது ஒரு பாடமாகும்
எனினும் இத் தேர்தலில் கற்றுக்கொண்ட பாடங்கள் எதிர்காலத்தில்
பயன்படுத்தப்பட சந்தர்ப்பங்கள் கிடைக்குமா என்பது சன்தேகமே !
ஏனெனில் தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியத்துக்குள் இயல்பாகவே ஒன்று கலந்து….இன,மத,மொழி பேதங்களைக் கடந்த மானிட தர்மம் ஒன்றை நிலை நிறுத்துவதே தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தம்.
அதனால் உளுத்துப் போன பழைய தமிழ் அடிப்படைவாத…பிற்போக்குவாத சூத்திரங்களுடன் வர்த்தகம் செய்ய,
போத்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காரர் போல உள் நுழைந்துள்ள ” பினாமிகள் ” மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டோ அல்லது
” வெறுங்கையோடோ அமெரிக்கா, கனடா, ஐரோப்பா புக்கான்” எனும் நிலையும் வரலாம்.
அல்லது இருக்க விரும்பின் திருந்தி ஒழுங்குக்குள் வரச் செய்யப்படுவார்கள்.
வேலை செய்வோரை பல்வேறு வகைகளிலும் சுரண்டிச் சுரண்டி துஸ்பிரயோகம் செய்வதிலிருந்து…. வேலை செய்வோரையும் தமக்குள் அதை அனுமதி ப் பதி லிருந்து…… வருமான வரியிலிருந்து EPF, ETF வரை மட்டுமல்ல கடந்தகால மகிந்த, ரணில், கோட்டா அரசுகளின் இனத்துரோக, தேசத் துரோக சொத்துச் சேர்ப்புக்கள், பயன்பாடுகள்…. எல்லாம் அம்பலத்துக்கு வரும்.
வெறும் அம்பலமல்ல… நாட்டின் ” legal frame” க்குள் வரும்.
இதை எழுதும் என்னைக் கூட ” Character Assassination ” மற்றும்” Physical assassination” செய்ய இந்த பினாமிகள் முயலுவார்கள்.
” பத்துத் தடவை பாடை வராது” என்றான் ஒரு தமிழ்க் கவிஞன்.
இவர்களைப் பற்றிய எனது அனுபவங்கள் அனைத்தும் எழுதிப் பதிவிலும் நல்ல நண்பர்களின் பார்வையிலும் பேணி வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் அவர்கள் திருந்துவதில் தான் தங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் உள்ள சமூக பொருளாதார அபிவிருத்தியை சர்வதேச ஒத்துழைப்புடன் கவனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல மனித வள ஆளணிகளும் நிபுணர்களும் முழுமையான தயார் நிலையில் உள்ளதை அறியவும் உணரவும் முடிகிறது. அத்துடன் ஒரு புதிய அரசியல் யாப்பு ஒன்று எழுதப்பட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்படுவதன் ஊடாக மூவினத்தவர்களும் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை அனுபவிக்கும் காலம் எம்மை அண்மிக்கும்.
” வாலையில ஆடினவன் வயசானாலும் காலைக் காலைப் போட்டு ஆட்டுவான் ” என்று ஒரு தமிழ்ப் பழமொழி உள்ளது.
அந்தக் குணம் மிக்க பழமைவாதிகள் தம்மை படிப்படியாக மாற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள்.
படித்து, பட்டறிந்து, பகுத்தறிந்து சுயமாகத் தம்மைத் திருத்திக் கொண்டு இலங்கைத் திரு நாட்டின் அபிவிருத்தி க்கும் அனைத்து இன,மத, மொழிகளைப் பின்பற்றும் இலங்கை மக்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்கும் உழைக்க திட சங்கற்பம் எடுப்போம்.
மாறுவதும் மாற்றுவதும் தத்துவார்த்தம், நடைமுறை இரண்டும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று துணையாகி கடைப்பிடிக்கப்படுவதாகும்.
General Elections 2024
All Island final with National List allocation
NPP-6,863,186(Seats 159)
SJB-1,968,716 (Seats 40)
ITAK-257,813 (Seats 8)
NDF-500,835 (Seats 5)
SLPP -350,429 (Seats 3)
SLMC -87,038 (Seats 3)
SB -178,006 (1)
UNP -66,234 (1)
DTNA -65,382 (1)
ACTC -39,894 (1)
ACMC -33,911 (1)
Ind.17Jaffna -27,855(1)
SLLP – 17,710 (1)-
Source: dailymirror.lk

