பொலிஸ் அதிகாரிகளை மடக்கி உறவு கொண்டு பணம் பறித்தது எப்படி? சிங்களப் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!!
பேஸ்புக் ஊடாக ஆண்களுடன் நெருக்கத்தை வளர்த்து, அவர்களின் குடும்பங்களை சிதைத்து வந்த இளம் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காதலித்து திருமணம் செய்த கணவன், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டு, அவருடன் வாழச் சென்றதால், ஆண்களில் வெறுப்பு கொண்டு இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அவர் குறுகிய காலத்தில் 15 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சிதைத்துள்ளார். எனினும், போலி முறைப்பாடளித்த குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணின் வலையில் சிக்கிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில், மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவிற்கு, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி ஊடாக வாட்ஸ்அப் ஊடாக அழைப்பொன்று வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய பெண்- “தயவு செய்து காப்பாற்றுங்கள் சார். ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு என்னை ஒரு கும்பல் மிரட்டுகிறது. கொடுக்க என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அம்மா, அப்பா வைத்திருக்கும் பணத்தில் இருந்து கொடுக்கச் சொல்கிறார்கள்.
பணம் கொடுக்காவிட்டால் என்னை பலாத்காரம் செய்து கொன்று விடுவார்கள் என்கிறார்கள். ஐயா, நான் என் உயிரை விடப்போகிறேன். எனக்கு உதவுங்கள்” என்று மூத்த டிஐஜியிடம் கெஞ்சினார். அழைப்பிலேயே அழுதார். இன்னொரு சமயம், “இப்போது எனக்கு வாழ்க்கையே அலுத்து விட்டது சார்” என்றார்.
மேலும், மிரட்டி பணம் பறிப்பவர்கள் கொடுத்த அழைப்புகளின் தகவல்களையும் தனது போனின் ஸ்கிரீன் கொப்பியாக வட்ஸ்அப் மூலம் மூத்த டிஐஜிக்கு அனுப்பியுள்ளார்.
திஸாநாயக்க முடியசெலாகே நிஷாதி ஜலங்கன என இந்தப் பெண் தன்னை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தனக்கு 29 வயது என்றும் சொன்னார்.
தான் ஒன்லைன் உயர்நிலை இரசாயனவியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாக குறிப்பிட்டு, அதை நிரூபிக்கும் வகையில், டிஐஜியின் கைபேசிக்கு பயிற்சி வகுப்புகளுக்கான பல விளம்பரங்களை இணையத்தில் வட்ஸ்அப் செய்ததார்.
அதே நேரத்தில், மூத்த டி.ஐ.ஜி.யிடம் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தான் பேராதனை ஹிந்தகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லலித் பத்திநாயக்க அவரது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக மேற்கொண்ட விசாரணையில், தான் உயர்தர இரசாயன வகுப்புகளின் ஆசிரியை என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய தந்தை ஒரு பொறியாளர். அம்மா உயிரியல் ஆசிரியர். தற்போது இருவரும் ஓய்வு பெற்றுள்ளனர் என குறிப்பிட்ட அந்தப் பெண்,, பல மாதங்களாக தனக்கு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரி இந்த மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என்றார்.
அந்த பெண்ணின் வாய்மூல தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்க முடியாது என புரிய வைத்த டிஐஜி, அந்த பெண்ணின் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள பேராதனை பொலிஸ் நிலையத்துக்க சென்று புகார் கொடுங்கள். அல்லது டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடு பதிவு செய்யலாம். அதன் பின்னரே விசாரணையை ஆரம்பிக்கலாம் என்றார்.
அதற்கும் அந்த பெண் ஒத்துவரவில்லை.
“சேர், நான் வர வழியில்லை. என் கால் உடைந்துவிட்டது, ஓபநாயக்கவில் இருக்கிறேன்“ என்றார்.
“அப்படியானால், நீங்கள் உங்கள் தாயையோ அல்லது தந்தையையோ முறைப்பாடளிக்க அனுப்பி வைக்கலாம்” என்று லலித் பத்திநாயக்க கூறினார்.
“சேர், இந்த பிரச்சனையால் அம்மாவும் அப்பாவும் மிகவும் பயப்படுகிறார்கள்.
இதனால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். போலீஸுக்குப் போகச் சொன்னால், இன்னும் கொந்தளிப்பார்கள். கப்பம் கேட்பவர்கள் கெட்டவர்கள்.
இந்த பிரச்சனையால் எனக்கும் இப்போது பைத்தியம் பிடித்துவிட்டது.
அதற்கும்எமருந்து எடுத்துக் கொள்கிறேன்,” என்றார்.
“அவர்களால் பொலிஸ் நிலையத்துக்க வர முடியாவிட்டால், பேராதனைப் பொலிஸாரை உங்கள் வீட்டுக்கு வந்து முறைப்பாடு பதியச் சொல்வேன்” என லலித் பதிநாயக்க அங்கு தெரிவித்தார்.
“இல்லை சேர். பொலிசார் சென்றால் பெற்றோர் பயந்து விடுகின்றனர். இது குறித்து அவர்களிடம் மீண்டும் பேசுவேன். பிறகு புகார் கொடுக்கலாம்“ என்றார்.
ஏறக்குறைய அதே நேரத்தில், மத்திய மாகாண மூத்த டிஐஜி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அவர் தனது புகாரை அனுப்பினார்.
அந்த பெண்ணின் தகவல்கள் குறித்து லலித் பதிநாயக்கவிற்கு பலத்த சந்தேகம் இருந்தது.
அந்தப் பெண் பொய் சொல்கிறார் என்று நினைத்தர். ஆனால், கப்பம் கோரும் கும்பலின் பிடியில் சிக்கியுள்ளதால் அவர் அவ்வாறு நடந்து கொண்டாரோ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது.
எனவே, இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவு, காவல்துறை புலனாய்வுப் பிரிவின் உதவியை அவர் கோருகிறார்.
சிறப்புப் பிரிவினரின் விசாரணையின் போது அந்தப் பெண் லலித் பதிநாயக்கவுக்கு வழங்கிய முகவரி கூட போலியானது என்று தெரிய வந்தது.
குறைந்த பட்சம் அந்த மாகாணத்தில், அத்தகைய பெயரைக் கொண்ட ஒரு பெண்ணையோ அல்லது அவர் சொல்லக்கூடிய பின்னணியைக் கொண்ட குடும்பத்தையோ கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், ஒன்லைனில் இரசாயணவ-யல் பாட வகுப்புகள் நடத்துவதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை ஆய்வு செய்தபோதும், அங்குள்ள தகவல்கள் கூட போலியானது என்பது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை பரிசோதித்த போது, புத்தளத்தில் உள்ள முகவரியில் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த முகவரியை தேடிய புலனாய்வாளர்கள் அந்த முகவரியும் போலியானது என கண்டுபிடித்தனர்.
அதன்படி, 1942ஆம் ஆண்டு பிறந்த ஒருவரின் அடையாள அட்டையின் நகலில் இருந்து அவர் தொலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார் என்பது தெளிவாகியது. அந்த பெண் தன்னை மிரட்டியதாக குறிப்பிட்ட தொலைபேசி இலக்கமும், போலி பதிவுடையது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இரண்டு போன்கள் இயங்கும் பகுதிகளை அடையாளம் காண புலனாய்வாளர்கள் அனைத்து தொழில்நுட்ப வழிமுறைகளையும் பயன்படுத்தினர்.
இரண்டு போன்களின் வழக்கமான அழைப்பு வசதிகளைத் தடுப்பதாலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் பிற தொழில்நுட்பத் தொகுதிகள் மூலம் மட்டுமே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதாலும், அந்த முயற்சிகள் கூட தோல்வியடைந்தன.
புலனாய்வாளர்கள் அந்த பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், லலித் பதிநாயக்கவுக்கு மீண்டும் ஒரு செய்தி அனுப்பினார், “மாமா இதைப் பற்றி கவலைப்பட்டார். எனவே, புகார் வாபஸ் பெறப்படுகிறது,” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்கவின் கடமை கையடக்க தொலைபேசிக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டிருந்தது. அந்த தகவலை அனுப்பிய இலக்கம், அந்த பெண் தன்னை மிரட்டியதாக குறிப்பிட்ட இலக்கம். கப்பம் கட்டாததால் பெண் ஒருவர் இன்று கொலை செய்யப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியைப் பார்த்த டி.ஐ.ஜி மகிந்த திஸாநாயக்க உசாரடைந்து, நேராக வந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவைச் சந்தித்தார். ஆனால் அந்த தொலைபேசி இலக்கம் மற்றும் பெண் தொடர்பில் ஏற்கனவே புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை பற்றி மஹிந்த திஸாநாயக்கவுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இது தொடர்பில் மஹிந்த திஸாநாயக்கவிடம் தெரிவித்து சில விசாரணைகளை நடத்த லலித் பத்திநாயக்க தீர்மானித்தார். அவர் இந்தப் பொறுப்பை கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவுக்கு வழங்குவார். அத்துடன், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்து, அந்த பெண்ணை கண்காணிக்கக் கிடைத்த ஒரே வழியாக இருந்த இரண்டு மொபைல் போன் எண்கள் மூலம் இந்த மர்மப் பெண்ணை அடையாளம் காணும் வேலையைத் தொடங்கினார்.
இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளின் உரிமையாளர்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலையில், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பலவித தொழில்நுட்ப வழிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தொலைபேசி இலக்கங்களும் கெக்கிராவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இயங்கி வருவதை கண்டறிந்தனர்.
இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் வைத்திருந்த பெண் பற்றிய முழுமையான விபரம் திரட்டப்பட்டது. பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பு விடுத்த இலக்கமும், கப்பம் கோரியதாக தெரிவித்த இலக்கமும் அந்த பெண்ணிடம் இருப்பது தெரிய வந்தது.
இரண்டு வெளிநாட்டு தேசிய அடையாள அட்டைகளின் புகைப்படங்களை மாற்றி தயாரிக்கப்பட்ட இரண்டு போலி அடையாள அட்டைகளின் இரண்டு நகல்களைப் பயன்படுத்தி மொபைல் போன் சிம்களை வாங்கியுள்ளார்.
அதன்படி, கெக்கிராவ தலாவ வீதி II இல் வேறொரு நபரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து தவறான ஆவணங்களைத் தயாரித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்படுகிறார்.
கெக்கிராவில் இருந்து கண்டிக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவரது விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணையில் அந்தப் பெண் பெரியதொரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் ரணதுங்க முடியசெலகே மாலிகா ஐரங்கனி. அப்போது அவருக்கு 39 வயது.
அழைப்புகள் செய்யும் போது அவரது வாட்ஸ்அப் எண்ணில் பதிவான படத்திலிருந்து அவரது உண்மையான படம் முற்றிலும் வேறுபட்டது. அந்த வாட்ஸ்அப் அக்கவுண்டில் தனது இளமையான படத்தை கணினி மூலம் மேலும் எடிட் செய்து பதிவேற்றியிருந்தார்.
அவர் கூறியபடி, அவர் கெக்கிராவ மருத்துவமனையில் பிறந்தார். அது செப்டம்பர் 14, 1985 அன்று. இவரது தந்தை ரணதுங்க முடியசெலகே களுபண்டா ஆவார். அவர் ஒரு எலும்பு முறிவு குணப்படுத்துபவர். பாரம்பரிய மருத்துவம் தவிர, மரம் வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டவர். தாயார் ரன்விகேதரா ரன் மனிகே. இருவரும் இப்போது உயிருடன் இல்லை.
மாலிகா ஐரங்கனிக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இருவர் சகோதரர்கள்.
ஒரு மூத்த சகோதரி. அவள்ர் திருமணமாகி தனது கணவருடன் அனுராதபுரத்தில் வசிக்கிறார். மூத்த சகோதரர் ஜப்பானில் வேலை செய்கிறார். அவரது குடும்பம் இலங்கையில் உள்ளது. மற்றைய சகோதரன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்.
மாலிகா ஐரங்கனி 2004 இல் 2 ஏ, சி பெறுபேற்றை பெற்றார்.
பின்னர், வடமத்திய மாகாண சபையின் ஹிகுராக்கொடையில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் அலுவலகத்தில் தான் சுமார் ஐந்து மாதங்கள் பணியாற்றியதாக அவர் கூறுகிறார். அந்த அரசியல்வாதியின் உதவியுடன் வடமத்திய மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தொழிலாளர் பரிசோதகராக பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மரதன்கடவலயில் உள்ள நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில் மூன்று வருடங்களாக அங்கே வேலை செய்தேன் என்கிறார். ஹொரவபொத்தானை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் ஒரு வருட காலம் பணிபுரிந்த அவர், வேலை நிரந்தரம் இல்லை, சரியான சம்பளம் கிடைக்காத காரணத்தால் அந்த வேலையை விட்டுவிட்டார்.
பட்டப்படிப்பை தொடர விரும்பினாலும், பணமில்லாததால் சுமார் ஒன்றரை வருடங்கள் வீட்டிலேயே இருந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு பல திருமண அழைப்புக்கள் வருகின்றன. அப்போது, திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் வாலிபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
மரதன்கடவல கண்டி வீதியில் தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் இவர், நிதி நிறுவனம் ஒன்றில் தவணை வசூலிப்பவராக பணியாற்றி வந்தார்.
2015 ஆம் ஆண்டளவில், அவர் வட மத்திய மாகாண கல்வி அலுவலகத்தில் பணி உதவியாளராக பணியாற்றினார். நிரந்தர சம்பளத்துடன் பணி நியமனம் பெற்ற பிறகு, மார்ச் 22, 2015 அன்று அவருடன் திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் சிந்தக கலப்பட்டிய.
திருமணம் கூட தம்புள்ளையில் உள்ள பெரிய ஹோட்டலில் நடந்தது. இதற்காக வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், ராணுவப் பணியில் இருந்த தன் தம்பியும் கூடுதல் செலவுகளைச் செய்ததாகச் சொல்கிறார்.
“திருமணத்திற்குப் பிறகு, நாங்கள் சிந்தகவின் வீட்டுக்குச் சென்றோம். நான்கு மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. எனது மாமியாருடன் தகராறு ஏற்பட்டது.
எனவே ஒரு வாடகை வீட்டிற்கு நாங்கள் தனியாக வந்தோம். 2018 வரை குடும்பமாக சந்தோஷமாக இருந்தோம். அந்த நேரத்தில்தான் கெக்கிராவ ஒலுகரட வீட்டில் உள்ள பெண் ஒருவருடன் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் திருமணமானவர்.
இருவரும் உல்லாசமாக இருந்த போது ஒரு நாள் என்னிடம் சிக்கினார்கள். அன்றிலிருந்து எங்களுக்குள் பிரச்சனைகள் இருந்து வந்தன. சிந்தக கடைசியில் என்னை விட்டுவிட்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றார். வாடகை வீட்டில்தான் தங்கியிருந்தேன். எங்களக்கு குழந்தைகள் இல்லை. அதனால்தான் சிந்தக என்னை எளிதில் விட்டுச் செல்ல முடிந்தது,” என்று அவர் கூறுகிறார்.
அப்போது, வவுனியாவில் உள்ளதாக கூறப்படும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்துள்ளார். அவர் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் போன்கள் மூலம் எவ்வாறு வேலை செய்வது என்பது பற்றிய அறிவைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
கணவர் பிரிந்து சென்றதால் அந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சரியான வேலையோ, வருமானம் கிடைக்காதோ, எப்படியோ தன் வாழ்க்கையைச் சமாளித்தாள்.
தான் கற்ற தகவல் தொழில்நுட்பப் படிப்பின் அறிவுடன் பணிபுரிந்தாலும், கணவனை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறுகிறார்.
“மருந்து குடித்துவிட்டு படுப்பதால், படுக்கையால் எழும் போது காலை பத்து பதினொரு மணியாகி விடும். அந்த நேரத்தில் வேலைக்குப் போக முடியாது. அதனால்தான் வேலை இழந்தேன். அதனால் எனக்கு ஆண்களிடம் பெரும் வெறுப்பு ஏற்பட்டது. ஆண்களை பழிவாங்க நினைத்தேன்” என்று ஒரு பெரிய கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அப்போது, அவரைப் பிரிந்து செல்வதற்காக அவரது கணவரும் கெக்கிராவ நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
ஜூலை 2023 இல் வழக்கு அழைக்கப்பட்டபோது, வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்ய விருப்பத்தை வெளிப்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
அப்போது முதல் ஆண்களை பழிவாங்கும் வெறி கொண்டார். ஃபேஸ்புக் மூலம் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்தி பல குடும்பங்களை உடைக்க ஆரம்பித்தார். இவரது வலையில் முதலில் சிக்கியவர் ஒரு பொது சுகாதார பரிசோதகர். அவர் அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர். மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெறச் சென்றபோது அவரைச் சந்தித்தார். பின்னர் அவர் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தார். பெரும்பாலானவர்கள் பேஸ்புக் மூலம் மாட்டிக்கொண்டனர்.
அவர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்து, பணத்தை பெற்றார். பின்னர் அந்த தகவல்களை மனைவிகளுக்கு பரிமாறி, குடும்பங்களை சிதைத்தார்.
அப்போது எஹெலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர சில்வா, அந்தப் பெண்ணுக்கு மிக நெருக்கமானவரக இருந்தார். அவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து தலையில் தன்னைத்தானே சுட்டு, தற்கொலை செய்தார்.
அவரைத் தவிர, காவல்துறையில் இருந்த பதினைந்து பேர் அந்தப் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அந்தப் பெண் பயன்படுத்திய மொபைல் போன்களை சோதனை செய்த போது அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி பல பொலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.
“2022 ஆம் ஆண்டில், நான் வேலையிழந்து வீட்டில் இருந்த போது, நான் கடுமையான அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில்தான் எஹலியகொட பொலிஸ் ஓ.ஐ. சி உடன் முகநூலில் அறிமுகமானேன். அந்த நட்பு மிக நெருக்கமான நட்பாக மாறியது. கிட்டத்தட்ட எல்லா நேரமும் ஃபேஸ்புக்கில் அரட்டை அடிக்கிறோம். நிறைய பேசுகிறோம்.
அவர் எனக்கு உதவி செய்துள்ளார். ஆனால் நாங்கள் ஒருபோதும் ஒன்றாகச் சந்தித்ததில்லை” என்று அந்தப் பெண் கூறினார்.
இருவரும் ஒன்றாக சந்திக்கவில்லை என்று கூறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், பொலிஸ் பொறுப்பதிகாரியின் மரண விசாரணையில் இருவரும் சந்தித்த தகவல்கள் வெளியாகியிருந்தமையே அதற்குக் காரணம்.
பிரியங்கர சில்வாவின் செல்போனை ஆய்வு செய்ததில், அப்போது பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இருவரை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பிரியங்கர சில்வா தற்கொலை செய்ய முதல் இருவருடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அதில் ஒருவர்- கைதாகியுள்ள இந்தப் பெண். மற்றையவர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பிரபல இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் மனைவி.
கடந்த 21ம் திகதி காலை பிரியங்கர சில்வா காலமானதை அறியாமல் இரத்தினக்கல் வியாபாரியின் மனைவி, தனது கைப்பேசியில் குட் மோர்னிங் செய்தியை அனுப்பினார். இரண்டு பெண்களையும் வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்த பொலிசார் முயன்ற போதும், தற்பேது கைதான பெண்ணை பொலிசர் அணுக முடியவில்லை. காரணம் அவர் போலி பெயரில் தோன்றியதே.
“அன்றிரவு பிரியங்கர அண்ணன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன் துயரங்களை என்னிடம் கூறுவார். என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சாக வேண்டும் என்று சொன்னார். அந்த நேரத்தில் நான் இறக்கச் சொன்னேன். அவர் உண்மையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுவார் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
பிரியங்கர சில்வாவின் இறுதி நிகழ்வுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவிக்கும் ஆறுதல் சொன்னார். ஆனால் பொலிஸ் ஓஐசியின் மனைவிக்கு, அந்த பெண்ணை தெரியாது.
இரண்டு மொபைல் போன்களை பயன்படுத்தி, சூட்சுமமாக இந்த மோசடியில் அவர் ஈடுபட்டாலும், இறுதியில் பொலிசாரிடம் அவர் சிக்கினார்.
மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு, அவரையும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் தனது வலையில் வீழ்த்த நினைத்தே, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். எனினும், அவர் விழிப்பாக இருந்ததால், அந்த பெண் சிக்கிக் கொண்டுள்ளார்.

