புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஜெகதீஸ்வரன் அருளீஸ்வரன்!!

பாலன் தோழர் என்பவரின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

எதிர்வரும் அக்டோபர் 22ம் திகதி நடைபெறவுள்ள சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஜெகதீஸ்வரன் அருளீஸ்வரன் போட்டியிடுகின்றார். தொழிலாளர்கள் நலன் சார்ந்த உரிமைக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியாக விளங்கும் SP கட்சியின் சார்பிலேயே இவர் போட்டியிடுகின்றார். இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.சு விஸ் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட முடிகிறது. சிங்கப்பூர் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடிகிறது.
கனடா சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக முடிகிறது.
லண்டன் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று கவுன்சிலராக முடிகிறது.
நோர்வே சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று நகர மேயராக முடிகிறது.
உலகெங்கும் செல்லும் ஈழத் தமிழர் அங்கெல்லாம் குடியுரிமை பெற்று வாழ முடிகிறது.
ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் மட்டும் 40 வருடங்களாக அகதிகளாகவே வாழ்கின்றனர்.
என்னே கொடுமை இது?

May be an image of 6 people