புதினங்களின் சங்கமம்

யாழில் 40 வயது பெண் ஒரு கிலோ மீற்றர் துாரம் நீந்திச் சாதனை!! நான்கு பேரப்பிள்ளைகள் உள்ள பெண் இரண்டாமிடம்!! 56 வயது மூதாட்டி 3ம் இ்டம்!! வீடியோ

நான்கு பிள்ளைகளைக் கொண்ட 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள், இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44 வயது பெண்மணி இரண்டாமிடத்தையும், நான்கு பேரப்பிள்ளைகள், ஆறு பிள்ளைகளைக் கொண்ட 56 வயதான பெண்மணி மூன்றாமிடத்தையும் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது.

இதன் போதே குறித்த வயோதிப பெண்மணிகள் நீத்தி பெரும் பருபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன.

ஆயினும் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் வயோதிப மாதுக்களின் நீச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை நீச்சல் போட்டி இடம்பெற்றது.

May be an image of 5 peopleMay be an image of 6 people, people swimming, boat, ocean and beachMay be an image of 7 people and boatMay be an image of 1 person, swimming and ocean