புதினங்களின் சங்கமம்

யாழில் படையினரின் வாகனம் மோதியதில் பொன்னம்பலவாணர் ஐயா படுகாயம்

யாழ். நகரில் இன்று {20} மதியம் இடம்பெற்ற விபத்தில் பொன்னாலை சித்திவிநாயகர் ஆலய அர்ச்சகர் பண்டிதர் பொன்னம்பலவாணர் ஐயா {வயது-77} படுகாயமடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரது மோட்டார் சைக்கிளை இராணுவ வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்த இவரை படையினர் தமது வாகனத்தில் ஏற்றிச்சென்று வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என வைத்தியசாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

May be an image of one or more people and people standing