இலங்கையில் பசிக்கொடுமையால் இறந்த பதினொரு மாத பச்சிளம் குழந்தை!!!!(Photos)
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள திஸ்ஸமகராம பிரதேசத்திலுள்ள கோனகமுவ கிராமத்தில் வசிக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் மூன்றாவது குழந்தையான 11 மாத சிசு மலித் மிஹிரங்காவிற்கு உரிய போசாக்கான உணவுகள் பால்மா வகை சென்றடையாததால் பலநாள் பட்டனியால் வாடி நேற்றையதினம் (18/06) இறந்துள்ளமை அப்பகுதியெங்கும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது,
இக்குடும்பம் ஒரு நேர உணவுகூடயின்றி நீர் அருந்தி வாழ்ந்துள்ளார்கள் ,குழந்தையிற்கு ஒவ்வொரு மாதத்திற்குரிய ஆரோக்கிய உணவை வழங்கினால்தான் நோய் எதிர்ப்புசக்தி உருவாகும் மந்த போசனையால் இச்சிசு நோய்நிலைக்கு உட்பட்டு மரணமடைந்துள்ளது,
இக்குழந்தை
மலித் மிஹிரங்காவின் பிரேத பரிசோதனையில் உரிய போசனையான உணவு இல்லாததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்,
அம்பாந்தோட்டை பொருத்தவரை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச பிறந்த மாவட்டமாகும் .இவரால் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் கொண்டு வரப்பட்டது இதன் மூலம் ஏழைகளை சென்றடையாமை பாரிய குறைபாட்டை காட்டுகின்றது,
இலங்கையில் பசிக்கொடுமையால் ஒரு சிசு மரணமானது இன்னும் இலங்கையில் ஏழைகளின் வாழ்வாதரம் மேம்படாதது வெளிக்காட்டுகின்றது.






