வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எல்.இளங்கோவன் நியமனம்!! ஆளுநர் அதிரடி!!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எல். இளங்கோவன் ஆளுநர்
கலாநிதி சுரேன் ராகவனால் இன்று (20) நியமிக்கப்பட்டார்.
அத்துடன், வடமாகாண ஆளுநரின் புதிய செயலாளராக சி.சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானங்கள் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று
ஆளுநர் நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக பதவி வகித்த சட்டத்தரணி எல்.இளங்கோவன், கல்வ
அமைச்சின் செயலாளராகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த
எஸ்.சத்தியசீலன், மாகாண ஆளுநரின் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண பொதுச் சேவையை வினைத்திறனானதாக மாற்றியமைக்கும் ஓர் அங்கமாகவே
செயலாளர்களுக்கான இந்த மாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகம் வடக்கு மாகாண நிர்வாகமாக தனியாக பிரிக்கப்பட்ட
போது, கல்வி அமைச்சின் முதலாவது செயலாளராகக் கடமையாற்றிய சட்டத்தரணி எல்.இளங்கோவன்,
தனது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்தார் என்று பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

