புதினங்களின் சங்கமம்

நல்லைக் கந்தனில் நடக்கும் அசிங்கங்கள்!! யாழ் மாநகரசபை ஆணையாளர் கவனிக்கவில்லையா?

யாழ் மாநகரசபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்திற்குச் சொந்தமான யாழ் மாநகரசபைக்கு அருகில் உள்ள நல்லைக்கந்தன் சாப்பாட்டுக்கடையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் கூடுபவர்கள் குறித்த கடையில் வைத்து சாராயாம் குடித்து மகிழ்வதாகவும் அப்பகுதியால் செல்பவர்கள் அயல்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கேட்கும் வண்ணம் பச்சைத் துாசணத்தில் கடைக்குள் இருந்து கதைப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளர். குறித்த கடையில் யாழ் மாநகரசபையில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுத்திகரிப்புத் தொழிலாளர்களே பெருமளவு செல்கி்ன்றார்கள். இதனால் குறித்த கடையில் சுகாதாரப் பிரிவினரும் கவனம் செலுத்துவதில்லை எனவும் அந்தக் கடையில் பாவிக்கப்படும் தேனீர் கிளாஸ்கள் கழுவாமலே மற்றொருக்கு தேனீர் குடிப்பதற்கு கொடுக்கின்றார்கள் எனவும் தெரியவருகின்றது. குறித்த கடையில் காணப்படும் பாத்திரங்கள் மற்றும் சமையல் உபகரணங்களும் அழுக்கடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதனை யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் சுகாதாரப்பிரிவினர்கள் கவனிக்கவில்லையா? என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.