புதினங்களின் சங்கமம்

யாழில் பஸ்சினுள் பெண் அரச உத்தியோகத்தரின் மர்ம பகுதியை தடவியவருக்கு பயணிகள் நடாத்திய கும்பாபிசேகம்!!

நேற்று காலை நாவற்குழிப் பகுதியில் தனியார் பஸ்சில் வந்த நடுத்தவயதான நபர்  பயணிகளால் நையப்புடைக்கப்பட்டு இறக்கிவிடப்பட்டார். கீழே இறக்கப்பட்ட நபர் மூக்கால் இரத்தம் வழிந்து முகம், கண்கள் வீங்கிய நிலையில் நீண்ட நேரம் தெருவோரம் இருந்துவிட்டு சென்றதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக அப்பகுதியில் நின்றவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பெண் அரச ஊழியர் ஒருவரின் மர்மப்பகுதியை தடவியதாக கூறியே குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்கள். பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு அங்கு நின்றவர்கள் பயணிகளிடம் கூறிய போதும் தங்களுக்கு  அதற்கு நேரம் இல்லை என கூறிச் சென்றுள்ளார்களாம். பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் வைத்தியசாலை ஊழியர்கள் அணியும் ஆடையுடன் காணப்பட்டுள்ளார்.