ஜீ தமிழுக்கும் யமுனாவுக்கும் என்ன தொடர்பு? – வெளிநாட்டில் தட்டிச் சுற்றும் பணத்தை வைத்து சுஜியுடன் சல்லாபம்!
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களாளோ அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களாலோ இவ்வாறான வேலை செய்ய முடியுமா?? அப்படி முடியுமானால் இவருடன் இணையுங்கள்… பார்த்தபின் பகிர்ந்து கொள்ளுங்கள்..
யாழ்ப்பாணத்தில் சுஜி என்ற டம்மி எப்படி வாயால் வடை சுடுவானோ அதுபோலதான் மலையகத்தில் யமுனா என்ற சிங்கிச்சா வாயால் வடைசுடுவது மாத்திரமல்ல வாயால் சுடும் வடைக்கு வாயாலே சாம்பலும் அரைத்து திரிகின்றாள்.
இந்திய பிரபல தொலைக்காட்சிகளான ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி ஆகியன பாடல் போட்டிகளை நடாத்தி வருகின்றன. அந்த போட்டிகளுக்கு இலங்கையில் இருந்தும் போட்டியாளர்களை உள்வாங்கப்படுவது வழமை.
போட்டியாளர்கள் திறமையின் அடிப்படையிலேயே உள்வாங்கப்படுகின்றனர். ஆனால் இவ்வாறு தெரிவு செய்யப்படும் போட்டியாளர்கள் தமது பரிந்துரையின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுவதாக டம்மி சுஜியும், சிங்கிச்சா யமுனாவும் கூறித்திரிகின்றனர்.
போட்டியாளர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும்போது அவர்களை அழைத்து செல்வது போல படம் காட்டியும், அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு வரும்போது போட்டியாளர்களை அழைத்து வருவது போல இவர்கள் காட்டும் படத்திற்கு அளவே இல்லை. யூடியூப்பில் தம்பிகள் எடுத்து போடும் வீடியோக்களில் தாங்கள்ததான் ஹீரோ, ஹீரோயின் போல டம்மியும், சிங்கிச்சாவும் சீன் காட்டுவார்கள். இவற்றை எல்லாம் அறியாத மக்களும் இவர்கள்தான் போட்டியாளர்களுக்கு பரிந்துரை செய்கின்றார்கள் என நம்புகின்றார்கள்.
இவர்கள் இப்படி செய்வதற்கு காரணங்கள் உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகள், இவ்வாறான போட்டியாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது வழமை. அவர்களுக்கான நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு டம்மி சுஜியும், சிங்கிச்சா யமுனாவும் இடை தரகர்களாக இருக்கின்றனர்.
கிடைக்கின்ற பணத்தில் முக்கால்வாசி பங்கினை தாங்கள் அடித்துவிட்டு கால்வாசியையே உரிய போட்டியாளரான பயனாளியிடம் வழங்குகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கால்வாசிகூட கிடைப்பது அரிது. அந்த போட்டியாளர்களும் தமது கஷ்ட நிலை காரணமாக வந்தவரை லாபம் என்று கப்சிப்பாக இருந்து விடுகின்றனர்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியாளர்களுடன் போடுகின்ற ஒப்பந்தம் ஒருபக்கம் இருக்கும்போது இவர்கள் மறுபக்கம் தாங்கள் ஒரு ஒப்பந்தத்தை போடுவதற்கு முயற்சிப்பார்கள். அந்த இடத்தில் செருப்படியும் வாங்குவார்கள். அந்த ஒப்பந்தம் என்னவென்றால், தாங்கள் நிதியை பெற்று தருவதால் தாங்கள் சொல்லும் மேடைகளில் தான் பாட வேண்டும். வேறு எந்த நிகழ்வுகளிலும் பாடக்கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தம் கைச்சாத்திட முற்பட்டு செருப்படி வாங்கிய சந்தர்ப்பங்கள் அதிகம். ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் தமது முயற்சியால் ஒரு நிலைக்கு வரும்போது இவர்களது பேச்சிற்கோ ஒப்பந்தத்திற்கோ எவர்தான் இணங்குவார்கள்?
டம்மி சுஜி ஊர் முழுவதும் தட்டிச் சுற்றிவிட்டு, வெளிநாட்டவர்களிடமும் தட்டிச்சுற்றிவிட்டு வீட்டிலேயே இருக்க முடியாத நிலையில் நாடோடியாக ஒழித்து திரிவதாக அறியமுடிகிறது. பிரபல ஊடகம் ஒன்றில் பணிபுரிந்த யாழ்ப்பாண பெண் ஒருவரையும் Bigg boss நிகழ்ச்சிக்கு அனுப்புவதாக கூறியும் வேறு ஒரு கதை கூறியும் அந்த பெண்ணிடம் இருந்தும் ஒருதொகை பணத்தை பெற்றுள்ளான் டம்மி சுஜி. ஆனால் அந்த பெண்ணை Big boss நிகழ்ச்சிக்கு அனுப்பவில்லை. அந்த பெண் தொடர்பான விடயங்கள் பின்னர் எமது செய்திச் சேவை வெளியிடும்.
சிங்கிச்சா யமுனா தான் கனடாவில் ஒரு வைத்தியர் என்றும் சிலருக்கும், ஒரு தாதியர் என்று சிலருக்கும் புழுகி திரிகின்றதாக, அவளது புழுகை கேட்டு காது சவ்வு வெடித்தவர்கள் கூறுகின்றனர். மலையகத்தில் இருந்து கனடா சென்றதாக கூறுவதே உண்மையா அல்லது புழுகா என்று சந்தேகம். ஏனெனில் பார்க்கின்ற முக்கால்வாசி நாட்களும் இந்தியாவிற்கும் – இலங்கைக்கும் என்றே சுஜியுடன் ஜோடி போட்டுக்கொண்டு சுற்றுகின்றாள்.
கணவனை பற்றி ஏதாவது கூறினாலும் அதனை அலட்சியமாக விடும் சிங்கிச்சா யமுனா, டம்மி சுஜி பற்றி ஏதாவது கூறினால் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருவாள். அதுபோல தான் டம்மி சுஜியும் தனது சொந்த மனைவிக்கும் மேலாகத்தான் அவளிடம் அக்கறை காட்டுவான். இருவருக்குமிடையே உள்ள உறவு என்பது கமல்ஹாசன் கூறியது போல அல்லாமல் “அதையும் தாண்டி அசிங்கமானது” என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது. இந்தியாவிற்கு செல்லும் சந்தர்ப்பங்களில் இருவரும் ஒரு ரூமிலேயே தங்குவதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். இரண்டு ரூமில் தங்குவதற்கு பணம் இல்லாததால் ஒரு ரூமில் தங்குகின்றார்கள் போலும்…
தென்னிந்திய கலைஞர்கள் பங்குபற்றும் இசை நிகழ்ச்சிகள் என்ன இலங்கையில் நடந்தாலும் அதனை தானே நடாத்துவதாக அண்டப்புழுகு புழுகுவான் டம்மி சுஜி. தென்னிந்தியவில் இருந்து கலைஞர்கள் வரும்போது விமான நிலையத்திற்கு சென்று அவர்களுடன் இணைந்து வருவதுபோல யூரியூப்பர் தம்பிகளின் வீடியோவில் பாசாங்கு செய்து, அந்த வீடியோவை வைத்து தானே அந்த நிகழ்ச்சியை நடாத்துவதாக ஊரை ஏமாற்றுவான்.
மலையகத்தில் இருந்து ஸ்னேகா என்ற யுவதி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பாடல் போட்டிக்கு தெரிவாகி செல்கின்றபோது சிங்கிச்சா யமுனாவும் அந்த யுவதியுடன் சென்று தான்தான் ஜீ தமிழுக்கு அழைத்து செல்வதாகவும், தானே சந்தர்ப்பத்தை பெற்று கொடுத்ததாகவும் புழுகிய விடயம் பலருக்கும் தெரியும்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி ஸரிகமப நிகழ்ச்சியிலேயோ, அல்லது விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலேயோ வேலை செய்கின்ற துப்புரவு பணியாளருக்கு இருக்கின்ற செல்வாக்கு கூட இவர்கள் இருவருக்கும் அங்கே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒவ்வொருத்தருடனும் வால் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று அங்கே படங்கள் எடுத்துவிட்டு, வெளியே வந்து அந்த நிகழ்ச்சியையே தாங்கள் தான் நடாத்துவது போல பில்டப் கொடுப்பார்கள்.
புலம்பெயர் தேசங்களில் இருக்கும் மக்கள் தாங்கள் வசிக்கின்ற நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடாத்தும்போது இலங்கையில் இருந்து இந்தியா சென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடிய பாடகர்களை அழைப்பது வழமை. அப்படி அழைப்பதற்கு டம்மி சுஜி, அல்லது சிங்கிச்சா யமுனா மூலம் தொடர்புகொண்டால்
பெருமளவான தொகையை வாங்கி அதில் ஒரு பகுதியையே அந்த பாடகர்களுக்கு வழங்கிவிட்டு மிகுதியை தாங்கள் கொள்ளையடிப்பது இவர்களது வழமை. அத்துடன் வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பை பேணுவதற்கு பாடகர்களை அனுமதிப்பதில்லை.
புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் மக்களே இனிமேலாவது இந்த டம்மி சுஜி மற்றும் சிங்கிச்சா யமுனா பற்றி விழிப்பாக இருங்கள். இனிமேல் நீங்கள் வழங்குகின்ற நிதியானது உரியவர்களிடம் சென்று சேர்கின்றதா என விழிப்பாக இருங்கள். டம்மி சுஜி, சிங்கிச்சா யமுனா ஆகியோரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் இருந்தால் எமது செய்திச் சேவைக்கு தெரியப்படுத்துங்கள்.

