புதினங்களின் சங்கமம்

வடிவேலுவிடம் வெள்ளிக் கட்டி கொடுத்தது போல் முல்லைத்தீவில் தங்க முத்துக்கள் கொடுத்த கில்லாடிக்கு நடந்த கதி!!

முல்லைத்தீவில் போலியாக தங்கமுலாம் பூசப்பட்ட முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் (19) இன்று முல்லைத்தீவு நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி தங்கமுலாம் பூசப்பட்ட 1400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவு நகரப்பகுதிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரைகைதுசெய்த முல்லைத்தீவு பொலீசார் போலி முத்துக்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் (20) நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.