புதினங்களின் சங்கமம்

4 மாதத்திற்குள் இலங்கையில் கொரோனாவால் 20,000 பேர் இறப்பார்கள்!! கூறியது யார்?

நான்கு மாதத்திற்குள் கொரோணாவால் 20,000 இறக்கும் சாத்தியம் ! முன்னாள் அமைச்சர். மங்கள சமரவீர !
விரைவாக பெருகிவரும் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வராவிடின் இந்த ஆண்டு புரட்டாதி மாதத்திற்குள் 20,000 பேர் கோவிட் 19 தொற்றால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வாஷின்டனை மையமாகக் கொண்டு இயங்கும் பல்கலைகழகம் ஒன்றினால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்த்துள்ளார் .
உலகளாவிய கோவிட் பேரிடரை மையமாக வைத்து மிக ஆழமாக செய்யப்பட்ட இந்த ஆய்வின் மீது இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதன் பிரகாரம் இலங்கை விரைந்து தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார் .
பிரித்தானியாவும் , அமெரிக்காவும் எவ்வாறு தொற்றை கட்டுப்படுத்தின என்பதை விரிவாக அக்கட்டுரை விளக்குவதாகவும் அந்த நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இலங்கை செயல்பட வேண்டும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுளார்