யாழ் கிறிஸ்தவ தேவாலயத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை!!
யாழ்.வடமராட்சி கிழக்கு, தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்த கைவரிசை காட்டியுள்ளனர்.
ஆலயத்தின் அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு, ஆலயத்திற்குள்ளிருந்த புனித பொருட்கள் வீசப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவிற்கான கணனி களவாடப்பட்டுள்ளது.
இது மத ரீதியான குரோதமா அல்லது வேறு ஏதும் காரணங்களா என பிரதேச வாசிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
புனித ஸ்தலங்கள் தாக்கப்படுவது மிகவும் வேதனைக்குரியது. இச்செயல் மிகவும் கண்டிக்கதக்கது.
மேலும் இச்சம்பவத்தின் பின்னணி குறித்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

