புதினங்களின் சங்கமம்

கள்ளக்காதலனுடன் அந்தரங்கம்!! சிங்கள மனைவியை அந்த இடத்திலேயே கொன்ற கணவன்!!(Photos)

ஹட்டன் , கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ,மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பெண்ணுக்கு மற்றுமொரு நபருடன் தொடர்பு இருந்ததை அடிப்படையாக வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மாலையே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், மறுநாள் 27 ஆம் திகதி மாலை குறித்த பெண்ணின் கணவர், தாமாகவே முன்வந்து கினிகத்தேனை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

மேலும் இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஸ்தல விசாரணையை மேற்கொண்டனர்.நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்,பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸாரும் மற்றும் ஹட்டன் கைரேகை பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No photo description available.May be an image of tree