யாழ் வந்த கொரோனா நோயாளி!! ஊடகவியலாளர்களுடன் சண்டித்தனம் காட்டிய வைத்தியர்!!(Photos)
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புகையிரத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில் வருகை தந்த வுனியாவைச் சேர்ந்தவர்களிடம் புகையிரத நிலையத்தில் வைத்து சுகாதார துறையினர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது புத்தளம் பகுதியில் இருந்து வவுனியா சூடுவெந்தபுலவு நோக்கி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடம் பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா புகையிரதநிலையத்தில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுனியா புகையிரத நிலையத்திற்கு நீண்ட நாட்களிற்கு பின்னர் முதலாவது புகையிரதம் இன்று மதியம் வந்தடைந்திருந்தது.
இதன் போது புகையிரதத்தில் பயணித்த பயணிகளிற்கு சுகாதார திணைக்களத்தின் ஒரு குழுவினரால் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது புகையிரதத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இச்செய்தியினை செய்தியாக்குவதற்காக இரு ஊடகவியளார்கள் வவுனியா புகையிரத நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இச்செய்தியினை முறையான அனுமதியுடனும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இரு ஊடகவியாளர்களிலாலும் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவரின் தொலைபேசியினை வைத்தியர் ஒருவரினால் பறிக்கப்பட்டதுடன் அநாகரியமாக பேசி அச்சுறுத்தியதுடன் புகையிரதநிலையத்தினை விட்டு வெளியே செல்லுமாறும் கூறி இருந்தார்.
இதனையடுத்து புகையிரதநிலையத்தில் கடமையாற்றியாற்றும் பொலிஸாரினால் வைத்தியரிடம் இருந்து குறித்த தொலைபேசியினை ஊடகவியலாரிடம் கையளிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த இடத்தில் இருந்து இரு ஊடகவியாளர்களும் வெளியேறியிருந்தனர்.
இதேவேளை, பின்னர் குறித்த வைத்தியரினால் ஒரு ஊடகவியலாளரிடம் தொலைபேசியில் மூலம் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்க

