புதினங்களின் சங்கமம்

மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை 1 லட்சம் பணத்துடன் திருட்டு!!

பொன்நகர் பகுகொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் வேலைக்கு புறப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளிலிருந்து கைப்பை அதனுள் இருந்த ஒரு இலட்சம் ரூபாபணம் புது மோதிரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குடும்பப் பெண் பணிக்குபுறப்பட்டுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிளில் ஏறியபின்னர் ஆவணங்களை எடுக்க மறந்து விட்டோம் என்பது ஞாபகம் வந்தது. வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது கைப்பையை அதில் வைத்துவிட்டு சென்று ஒரு சில நிமிடங்களில் திரும்பி வந்தபோது கைப்பை திருடப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள சீ.சி.ரி.வி கமரா பதிவுகள் உள்ளன தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.