யாழ் நுணாவில் பகுதியில் துப்பாக்கி மீட்பு!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் சித்தி விநாயகர் ஆலயம் உள்ள கிணறு ஒன்றிலிருந்து துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி ஒன்று நேற்று (15) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
குத்தகைக்கு மரக்கறி தோட்டம் செய்யும் ஒருவர் அந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது கிணற்றினுள் துப்பாக்கி இருப்பதை அவதானித்து சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன்படி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் சென்ற குழுவினர் குறித்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

