புதினங்களின் சங்கமம்

வடமராட்சி செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவர்கள் பச்சைக் கள்ளர்களும் காவாலிகளுமா? மாணவர்களின் பெற்றோரும் கேவலம் கெட்டவர்களா? நடந்தது என்ன?

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உள்ள அ.த.க பாடசாலைக்கு நிரூபன் எனும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பாடசாலை மாணவர்களின் உடல், உளப் பரிசோதனைகளுக்காக அங்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் அங்குள்ள மாணவர்களின் கண்களைப் பரிசோதனை செய்துள்ளார். குறித்த மாணவர்களின் கண்களைப் பரிசோதனை செய்வதற்காக அந்த மாணவர்கள் ஒவ்வொருவரின் ஒற்றைக் கண்களை மூடி ஒவ்வொரு கண்ணையும் பரிசோதனை செய்வதற்காக மாணவர்களின் ஒற்றைக் கண்ணை மறைப்பதற்கு தனது வங்கி அட்டை (ATM) ஐ மாணவர்களுக்கு கொடுத்து பரிசோதித்துள்ளார்.

இவ்வாறு கொடுக்கப்பட்ட அந்த ATM இருந்த இலக்கங்கள் மற்றும் குறியீடுகளை குறித்த மாணவர்களில் சிலர் அல்லது ஒருவர் மனப்பாடம் செய்து அல்லது எழுதி வைத்திருந்துள்ளார்கள். பரிசோதனைகள் செய்து முடிந்த பின் பொதுச்சுகாதார பரிசோதகர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மளமள என அவரது வங்கி அட்டையில் இருந்து பணம் பறி போகத் தொடங்கியது. ஒன்லைன் மூலம் பிள்ளைகளை அடிமையாக்கும் மிகக் கொடூரமான தொலைபேசி கேம் ஒன்றில் பணம் வங்கி அட்டை இலக்கங்களை வைத்து டொலர்களில் பணம் கட்டப்பட்டு அந்த விளையாட்டில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபா பெறுமதியான துப்பாக்கிகள் குறித்த மாணவர்களால் வாங்கப்பட்டு அந்த விளையாட்டு விளையாடப்பட்டுள்ளது, இவ்வளவும் நிரூபன் வீடு போய் முடிவதற்கிடையில் பணம் பறி போகியுள்ளது.

அதன் பின்னர் பொதுச்சுகாதார பரிசோதகர் தனது சமூகவலைத்தளத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு மாணவகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில் மாணவர்களா? இல்லைப் பேய்களா எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் பாடசாலையின் பெயரையோ அல்லது குறித்த பிரதேசத்தையோ குறிப்பிடாமலே தனது கருத்துக்களை உணர்வு பூர்வமாக கூறியிருந்தார்.

உண்மையில் நிரூபன் செய்த மிகப் பெரிய பிழை தனது வங்கி அட்டையை மாணவர்களின் கண் பரிசோதனைக்கு பயன்படுத்தியது. ஆனால் நிரூபனுக்கு சில வேளை அந்த அட்டையை ஒன்லைன் மூலமான பண மோசடிக்குப் பயன்படுத்தலாம் என்பது தெரியாது இருந்திருக்கலாம். அதே வேளை பலர் தமது நம்பிக்கைக்குரியவர்களிடம் தமது வங்கி அட்டையைக் கொடுத்தும் ATM இல் பணம் எடுப்பது வழமையான நடமுறை. இனிவரும் காலம் அவர்களும் அவதானமாக இருத்தல் வேண்டும். நிரூபன் செய்த அந்த பிழையைத் தவிர நிரூபன் தனது சமூகவலைத்தளதில் கூறிய கருத்துக்களில் சட்டத்தை மீறி எதையும் அவர் குறிப்படவில்லை.

ஒரு சில நிமிடங்களில் அதுவும் 15, 16 வயதான மாணவர்களினால் தனது பணம் 50 ஆயிரம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்பதை அறியும் போது மிகப் பெரும் கோபம் மற்றும் விரக்தி கட்டாயம் எவருக்கும் வரும். அவற்றை தனது உணர்ச்சிகளில் வெளிப்படுத்தாது ஆனால் சற்றுத் தளம்பல் நிலையுடன் கூடிய பெறுமதியான ஏனையவர்களையும் அவதானமாக இருக்குமாறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அத்துடன் தனது மேலதிகாரி பற்றியும் சற்று குறை கூறியிருந்தாலும் பணம் பறி போன விரக்தி மற்றும் ஆற்றாமையால் அவர் கூறியவற்றை பொறு்ததுக் கொள்ளலாம்.

இவ்வாறான நிலையில் குறித்த பாடசாலை எது என நிரூபன் கூறாத போதும் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அமெரிக்கமிசன்தமிழ்க் கலவன் பாடசாலை தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகரான நிரூபன் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த தன்னை ஊடகவியலாளர் என கூறி தனது பேஸ்புக்கில் மட்டும் சிலவற்றை வெளியிட்ட வரும் மரியசீலன் திலைக்ஸ் என்ற அரைகுறை ஒன்று பேஸ்புக்கில் விசர்க்கூத்தாடியுள்ளது. அத்துடன் குறித்த பாடசாலை எது என்பதையும் அந்த அரைகுறை சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அரைகுறை சுட்டிக் காட்டியிருந்த பின்னர்தான் எமது ஊடகப்பிரிவினருக்கு அந்தப் பாடசாலை செம்பியன்பற்று பகுதியில் உள்ள அ.த.க பாடசாலை என்பது தெரியவந்தது.

அத்துடன் அந்தப் பாடசாலை மாணவர்களின் கள்ள, காவாலி வேலைக்கு ஆதரவாக குறித்த பாடசாலைக்கு மாணவர்களின் பெற்றோர்களும் நிரூபன் கூறியது பிழை என தெரிவித்து நிரூபனை அ்ங்கு வரவழைத்து நியாயம் கேட்க முற்பட்டனராம். அப் பாடசாலையில் நல்ல குணமான அதே நேரம் கெட்டித்தனமான மாணவர்கள் சில வேளை இருக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஆனால் அப் பாடசாலை தொடர்பாக கல்வி மற்றும் விளையாட்டுக்களில் எந்தவித முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றதாக ஊடகங்களில் வந்ததை நாம் இன்னும் அறியவில்லை.

அதே நேரம் அந்தப் பாடசாலையில் ஆசிரியர்கள் அல்லது அதிபர் மாணவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட முற்பட்டால் அவர்களை அச்சுறுத்துவதும் அவர்களின் மோட்டார் சைக்கிள்களின் ரயர்களை ஓட்டையாக்குவதும் சேதமாக்குவதும் வழமை என தெரியவருகின்றது. இப்படியான பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த மாணவர்களின் முதுகை உரித்து காய வைக்காமல் காவாலிப் பிள்ளைகளுக்காக நிரூபனை குற்றம் சாட்ட முற்படுவது எந்தவ வகையில் நியாயம்?

கடந்த சில வாரங்களுக்கு முன் தன்னை ஊடகவியலாளர் என கூறிச் செயற்படும் திலைக் என்ற அரை குறையின் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையை யாரோ ஒருத்தன் சேதப்படுத்தியதாக கூறி பி.பி.சி செய்தியாளர் கொல்லப்பட்டமாதிரியான எடுப்புடன் அப்பகுதியில் உள்ள சிலரை வைத்து கருத்துக் கூற வைத்திருந்தான். சில வேளை அந்த அரைகுறையின் மோட்டார் சைக்கிள் பின் சீற்றை கிழித்ததும் குறித்த பாடசாலையில் கற்று வந்த இன்னொரு அரைகுறையாகவே இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது,

என்னடாப்பா திலைக்ஸ்…. உனக்கு வந்தால் ரத்தம்..மற்றவங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்டினியா?

May be an image of text that says "ooce மரியசீலன் திலைக்ஸ் 2h செம்பியன்பற்று அ. அ.த.க க பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களின் கண்களையும் பரிசோதிக்க வேண்டும். .Μ அட்டை கொண்டு கண்ணை மறைக்க வற்புறத்தப்பட்டுள்ளார்கள் 15 9 comments"May be an image of text that says "17 Most relevant Author மரியசீலன் திலைக்ஸ் Add friend தன்னுடைய பணத்தை இழந்து விட்டதாக கூறும் PHI அதிகாரி விசாரணைகளின் பின்னர் இழந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்ட பின் செம்பியன்பற்று அ. அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் இலவச கண் பரிசோதனை செய்ய வேண்டும் சுகாதார பரிசோதகர் கொடுத்த Α.. அட்டை மூலம் பல நாட்கள் கண்களை மறைத்த மாணவர்கள் யாருக்காவது கண் பார்வை சிக்கல் கண்டு பிடிக்கப்பட்டால் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த சுகாதார அதிகாரியிடம் இழப்பீடு கோரலாம் 2h Like Reply 1 Comment as Niroopan Natkunarajah <"