Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணம் கரவெட்டி கப்பபூது வெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

யாழ்ப்பாணம் கரவெட்டி கப்பபூது வெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை மூலம் இன்று திங்கட்கிழமை(02.03.2026) பிற்பகல் யாக்கரை-கப்பூது வெளி காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு கசிப்பு,கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி வே.ரஷிகரன் தலைமையில் மதுவரிப் பரிசோதகர் கனநாதன் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் போதே மேற்படி மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 115லீற்றர் கசிப்பு,1010லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.மீட்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் தப்பித்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மதுவரி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.