உயர்தரப் பரீட்சை நடக்குமா நடக்காதா??? இதோ தகவல்!!
முல்லைத்தீவில் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் விபத்து!! இருவர் படுகாயம்!! (Photos)
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள பரீட்சைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாக உயர்தர பரீட்சைகள் மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்தும் விதம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரச்சினை பெரும்பாலும் மே மாதம் வரை நீடிக்குமானால், பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிய முடிகின்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும், பரீட்சைகள் திணைக்களம் இவ்வாறானதொரு நிர்கதியான நிலையை எதிர்நோக்கியிருந்தது.
எனினும், கடந்த ஆண்டு திட்டமிட்ட வகையில் பரீட்சைகளை நடத்த முடிந்ததாக குறித்த உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
அவ்வாறே தாம் இந்த முறையில் அதே வகையிலான பிரச்சினையொன்றை எதிர்நோக்கியுள்ளதாகவும், கலந்துரையாடல்களின் பின்னரே தீர்மானமொன்றை எட்ட முடியும் எனவும் அவர் கூறினார்.

