புதினங்களின் சங்கமம்

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு விமானங்கள் பிரவேசிக்க தொடரும் தடை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது.

இதற்கு முன்னர் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த பின்னணியிலேயே அரசாங்கம் விமான நிலையத்திற்கு வருகைத் தரும் பயணிகள் விமான சேவைக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.