Home புதினங்களின் சங்கமம் யாழி்ல் சந்தைகள், வர்த்தக நிலையங்களில் அதிகாலையிலிருந்து அலை போதும் மக்கள்!! (Photos)

யாழி்ல் சந்தைகள், வர்த்தக நிலையங்களில் அதிகாலையிலிருந்து அலை போதும் மக்கள்!! (Photos)

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களை பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

கடந்த மூன்று நாட்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்த ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டள்ள நிலையில் யாழிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெருமளிலான மக்கள் திரண்டு செல்கின்றனர்.

கொரோனோ தாக்கத்திலிருந்து விடுபடுதற்காக மாஸ்க் முகமூடி அணிந்து செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆயினுமு; இன்றையதினம் வர்த்தக நிலையங்களுக்கு சென்ற மக்கள் பலரும் முகமூடி அணிந்து செல்லவில்லை.

அத்தோடு இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டும் சில இடங்களில் இடைவெளி விட்டு நின்றிருந்தாலும் பல இடங்களில் குழுமியே இருக்கின்றனர்.

ஆகவே மாஸ்க் அணிந்து வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல நபர்களுக்கிடையில் இடைவெளியை பின்பற்றி நிற்குமர்றும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

IMG-0358

 

IMG-0360

 

IMG-0361

 

IMG-0363%2B%25281%2529

 

IMG-0363

 

IMG-0364

 

IMG-0365

 

IMG-0366