Home புதினங்களின் சங்கமம் யாழில் வீடியோ எடுத்தவாறு அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு காவாலிகள் சம்பவ இடத்திலேயே...

யாழில் வீடியோ எடுத்தவாறு அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு காவாலிகள் சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – கனரக வாகன விபத்தில் இரு காவாலிகள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
கைதடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு காவாலிகளும் தமது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று வேக கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments