புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கணவன் 2ம் மாடியில் பிணமாக: மனைவி மொட்டைமாடியில் 2 நாளாக: இத்தாலி கொரோனா !

இத்தாலியில் பல நகரங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில். கணவன் கொரோனா வைரசால் இறந்து போக. வீட்டின் முன் கதவை திறக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை மாடிக்குச் சென்று கூச்சலிட்டுள்ளார் 2 நாட்களாக. உதவி உதவி என்று அவர் போட்ட கூச்சல் எவருக்கும் கேட்க்கவும் இல்லை. அப்படியே கேட்டால் கூட எவரும் உதவி செய்யும் நிலையிலும் இல்லை.

இறுதியாக பொலிசாரும் மருத்துவர்கள் 2 நாட்கள் கழித்து அவரது வீட்டுக்கு சென்றவேளை. ஒரு ஜன்னல் வழியாக வெளியே சென்று செத்து மடிவதே மேல் என்று கணவன் நினைத்து. அந்த ஜன்னல் ஊடாக அவர் வெளியே செல்ல முற்பட்டுள்ளார். ஏன் எனில் அவர் தனது மனைவிக்காவது கொரோனா தொற்றாமல் இருக்கவேண்டும் என்று எண்ணியுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. ஜன்னல் ஓரமாக இறந்து பிணமாக கிடந்த காட்சிகள் நெஞ்சை உருக்குகிறது.

மனித நேயம் எங்கே சென்றது என்று எண்ணத் தோன்றுகிறது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால், அந்த வீட்டுக்குச் சென்று உதவி செய்வதே ஆபத்து என்று கருதி. எவரும் இந்த முதிய தம்பதிகளுக்கு இறுதிவரை உதவி செய்யவே இல்லை. கடைசியாக மனைவியை காப்பாறியுள்ள மருத்துவர்கள். அவரை வைத்தியசாலையில் சோதனைக்காக அனுமதித்துள்ளார்கள். அந்த தெருவையே அவர்கள் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்து வருகிறார்கள்.