புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சுற்றுலா வழிகாட்டி இவர்தான்?? யாழ்ப்பாணம் வந்தாரா??

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு சென்றுவந்துள்ளதாக தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள இலங்கை சுற்றுலா வழிகாட்டி கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளுக்கு இத்தாலி நாட்டவர்களுடன் சென்றுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் இத்தாலி நாட்டவர்களுடன் சுற்றுலா வழிகாட்டியாக கண்டி மற்றும் தம்புள்ளை பகுதிகளில் ஒருவாரம் தங்கி இருந்துள்ள அதேவேளை அங்கு உள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இத்தாலி நாட்டவர்களும் சுற்றுலா வழிகாட்டியும் சென்று வந்த இடங்கள் அவர்கள் நெருக்கமாக இருந்தவர்கள் தொடர்பிலும் கவணம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா வழிகாட்டியின் குடும்பத்தினர் தற்போது தனிமைப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அவர் மார்ச் 3 முதல் 8 வரை அமாயா லேக் மற்றும் ராயல் கண்டியன் ஹோட்டல்களில் தங்கியுள்ளார். உங்களில் யாராவது அந்த ஹோட்டல்களில் அந்த நாட்களில் தங்கியிருந்தால், தேவையான சுகாதார பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

25/02 Amaya Lake, Dambulla
26/02 – Amaya Lake, Dambulla
27/02 – Amaya Lake, Dambulla
28/02 – Royal Kandyan , Kandy
29/02 – Royal Kandyan , Kandy

3/03 – Amaya Lake, Dambulla
4/03 – Amaya Lake, Dambulla
5/03 – Amaya Lake, Dambulla
6/03 – Royal Kandyan , Kandy
7/03 – Royal Kandyan , Kandy

02/03 from Dickwella resort

மேலுள்ள இடங்களில் மற்றும் நாட்களில் அவர் சென்று தங்கியுள்ளார்

இதே வேளை வைரஸ் கொரேனோ தொற்றுக்குள்ளான நபர் இவர்தான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவுகின்றது. அந்த புகைப்படத்தில் காணப்படும் நபர்கள்  யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கும் வந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன….

குறித்த நபரும் இந்த வெள்ளைக்காரர்களும் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அம்மாச்சி உணவகம், மற்றும் தல்செவன விடுதி போன்றவற்றில் கண்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றன……

 

Image may contain: 5 people