ரவிராஜின் பொஞ்சாதி சுமந்திரனின் துாண்டிலில் சிக்கினார்!! அனந்தி போல் சின்னாபின்னமாவாரா??
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி களமிறங்கவுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா, யாழ் மாவட்ட தேர்தலில் களமிறங்கவுள்ளார் என்ற செய்தியை பல மாதங்களின் முன்னரே புளொட் சார்பு இணையத்தளம் முதன் முதலில் வெளிப்படுத்தியிருந்தது.
அதை தொடர்ந்து அந்த செய்தியை தமிழ்வின், ஜேவிபி உள்ளிட்ட பல இணையத்தளங்கள் மீள்பகிரசுரம் செய்தன.
தென்மராட்சியில் அருந்தவபாலன் என்ற பலமான வேட்பாளரை முறியடிக்க, மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தனால் முடியாது என்பதால், சசிகலா ரவிராஜை களமிறக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியது. இதை ஆரம்பத்தில் சசிகலா விரும்பவில்லை.. தேர்தலில் களமிறங்க தயக்கம் காட்டி வந்தார்.
இந்த நிலையில், தற்போது யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறங்க சம்மதித்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் நியமன குழு கூட்டத்தில் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார் என்பதை புளொட் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளதாம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், அவரை களமிறக்க தமிழ் அரசு கட்சி விரும்பியிருந்தது. எனினும் சசிகலா ரவிராஜ் அதை விரும்பியிருக்கவில்லை. இம்முறை, தென்மராட்சி விவகாரம் தமிழ் அரசு கட்சிக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ள நிலையில், பகீரத பிரயத்தனம் செய்து அவரை தமிழ் அரசு கட்சி களமிறக்கியுள்ளது.
இதன்மூலம், கே.சயந்தன் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்கப்படமாட்டார் என்பது உறுதியாகிள்ளது.
இவ்வாறு புளொட் சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

