கன்னித்தன்மையும் – கன்னித்திரையும் &அதன் மாயைகளும் – Dr.Aravindha Raj கூறுவது என்ன?
முதல்ல….இந்த டாபிக் உள்ள போறதுக்கு முன்னாடி…இதை படிக்கப்போற பெண்களுக்கு ஒரு கேள்வி.
நீங்க விர்ஜினிட்டி பத்தி உங்க மனசுல என்ன நெனச்சு வெச்சுருக்கேங்க !! அல்லது Basic ஆஹ் விர்ஜினிட்டி னா என்ன னு புரிஞ்சு வெச்சுருக்கீங்க ன்னு ஒரு 30 செகண்ட் உங்க மூளையோட நியூரான்கள் கிட்ட கேட்டு உங்களோட அறிவை புரட்டிபாத்துட்டு அப்றம் இதுக்குள்ள போங்க.
ஆண்கள்…நேராவே உள்ள ஜாவ்….
இதை நான் ஒரு 5 தலைப்புக்கு கீழ சொல்லணும்னு ஆசை படறேன்…
1.விர்ஜினிட்டி ன்னா என்ன? ஹைமன் ன்னா என்ன?
ஹைமன் அப்டின்றது என்ன னா…பெண் உறுப்பை சுத்தி பாதி நிலா வடிவில,கிட்டதட்ட பிறை வடிவம்(HALF MOON) ல இருக்க ஒரு எலாஸ்டிக் ரப்பர் layer…CRESENT SHAPED HYMEN.இது கிழிஞ்சா விர்ஜினிட்டி போய்டுச்சு…கிழியாம இருந்தா விர்ஜினிட்டி இருக்குன்னு அர்த்தம் ன்னு தான் எல்லாரும் புரிஞ்சி வெச்சிருக்கோம்….(VIRGINITY=INTACT HYMEN)
2.இந்த ஹைமன் ஓட வேலை தான் என்ன? விர்ஜினிட்டி கண்டுபிடிக்கவா?
சத்தியமா இல்லை.
ஹைமனுக்கு 2 முக்கியமான வேலைகள் உண்டு…
1.மாதவிடாய் சமயத்துல ரத்தப்போக்கு இந்த ஹைமன் வழியா தான் வெளிய வரும்.
2.கெட்ட பாக்டீரியா எதுவும் பெண்களுக்கு போய்ட்டு நோய்க்கிருமிகளை குடுக்கக்கூடாது ன்னு ஒரு தடுப்பு சுவர் மாதிரியும் இந்த ஹைமன் இருக்கு
இதனோட செயல்பாடுகள் பத்தி நிறைய article வேற வேற சொல்லிருக்கும்.சிலர் ஹைமனுக்கு வேலையே இல்லை ன்னு சொல்லிருப்பாங்க.சிலர் இந்த 2 வேலையை செய்யுதுன்னு சொல்லிருப்பாங்க.
3.சரி….அதனோட வேலைய செஞ்சிட்டு போகட்டும்!!அது கிழிஞ்சா கன்னித்தன்மை இல்லன்னு முடிவு பண்ணிடலாம் ல….சிம்பிள் ல ??
கிடையாது…எல்லா பெண்களுக்கும் ஹைமன் ஒரே மாதிரி இருக்காது….அதாவது நான் முதல்ல சொன்னேன் ல….CRESENT (பிறை)வடிவ ஹைமன், அதுல துவாரங்கள் இருக்கும்…அது வழியா தான் மாதவிடாய் அப்போ ரத்தப்போக்கு வரும்.
ஆனா நெறைய பெண்களுக்கு,ஹைமன் CRESENT வடிவம் லயே இருக்காது…
துவாரங்கள் இல்லாம இருக்கலாம்.நிறைய Abnormal types இருக்கு.Imperforate,Septate,Microperforate,Annular,Cribriform னு.So, இந்த ஹைமன் வெச்சு விர்ஜினிட்டி ய சொல்லிட முடியாது!!இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம்.இந்த மாதிரி abnomral ஆஹ் இருக்கறதால,ஒழுங்கா மாதவிடாய் ரத்தம் வெளிய வராம,HYDROCOLPOS & HYDROMETROCOLPOS னு தொந்தரவுகள் வந்து ஆப்ரேஷன் வரைக்கும் போகும்.
அவ்ளோ ஏன் !! கற்பழிப்பு நடக்குறப்ப,நடந்தது கற்பழிப்பு தானா ன்னு உறுதி செய்ய,டாக்டர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சில சோதனைகள் செய்வாங்க.அதுல ஒன்னு “TWO FINGER TEST”…ஹைமன் தன்மையை பாக்க….இந்த ஹைமன் மூலமா அதை உறுதியா சொல்லிட முடியாதுன்னு சுப்ரீம் கோர்ட் அந்த சோதனைய 2012 ல தூக்கிடுச்சு….ஹைமன் மூலமா விர்ஜினிட்டி பத்தி CONCLUSIVE EVIDENCE கிடைக்காது.
4.சமுதாயம் இந்த விர்ஜினிட்டியை எப்டி அணுகுது?
ஒரு புரிதல் வேணும் இதைப்பத்தினு தான் இந்த சமுதாயம் அப்டின்ற விஷயத்தை தூக்கி இங்க கடைசியா வச்சிருக்கேன்.
சமுதாயம் பெண்களை இந்த விர்ஜினிட்டி வெச்சு ரொம்பவே இழிவு படுத்தி Judge பண்ணுது..
உங்க நெறைய பேருக்கு தெரியாது.
கல்யாணம் முடிஞ்சு முதல் இரவுக்கு போறப்ப கல்யாண பெண்ணுக்கு வெள்ளை/சந்தன புடைவை கொடுப்பாங்க…இல்லன்னா பெட்ஷீட் வெள்ளை கலர் ல இருக்கும்…முதல் இரவு முடிஞ்ச அடுத்த நாள் காலைல மாமியார் தான் போய்ட்டு எடுப்பங்க அந்த துணியை….அதுல ரத்தம் கரை படிஞ்சிருந்தா,பொண்ணு இவ்ளோ நாள் விர்ஜின் னு முடிவு பண்ணிக்குவாங்க….GEORGIA நாட்டுல இன்னைக்கு வரைக்கும் எல்லா வீட்டுலயும் இந்த கலாச்சாரம் இருக்குது.
ஒரு வேளை….
அந்த பெண்ணுக்கு Abnormal ஹைமன் இருந்தா ??
ஒரு வேளை….
அந்த பெண்ணுக்கு ஹைமன் கிழியாம இருந்தா (சிலருக்கு ஹைமன் Sexual intercourse அப்போ கிழியாது…ஹைமன் நான் சொன்ன மாதிரி ஒரு எலாஸ்டிக் ரப்பர் சதை…கிழியனும் னு 100% அவசியம் இல்லை.அது விரிஞ்சி சுருங்கிடும்.)
ஒரு வேளை…அந்த பெண் விளையாட்டில நாட்டம் கொண்டவரா இருந்து ஹைமன் சின்ன வயசுல கிழிஞ்சிருந்தா? (YES….Vigorous works like Bicycling,horse riding or any strenous works may result in Hymen tear.)
அந்த பொண்ணோட நிலமை????ஈஸியா judge பண்ணிட்டு போய்ட்டே இருப்பாங்க.
5.இந்த விர்ஜினிட்டி பத்தி நான் சொல்ல காரணம் ?
இங்க இருக்க நிறைய பேருக்கு குழந்தை இருக்கலாம்…சிலருக்கு 10 வருஷத்துல குழந்தை பிறக்கும்.பலருக்கு இந்த விர்ஜினிட்டி னா என்னனே தெரியாம இருக்கும்..மொதல்ல நாம இதை தெளிவா புரிஞ்சிக்கணும்.அப்போ தான் நாம நம்ம குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தோட சேர்த்து இந்த பாலியல் கல்வியும் குடுக்க முடியும்.பாலியல் கல்வி ன்னா sex மட்டும் இல்ல….நம்ம உடம்புல என்ன நடக்குதுன்னு சொல்லி குடுக்குறது தான் அடிப்படை SEX EDUCATION ன்னு சொல்லப்படும் பாலியல் கல்வி.
பெண்கள் தயவு பண்ணி,நீங்க இதெல்லாம் புரிஞ்சிக்கோங்க.இது தான் உங்க உடம்போட செயல்பாடு.இதெல்லாம் படிச்சு கத்துகோங்க.சாதாரண ஒரு திசு அது.நான் நெறய பெண்கள் இந்த விர்ஜினிட்டி யை ஆஹோ.. ஓஹோ ன்னு சொல்ல கேட்ருக்கேன்…I AM SAVING IT FOR MY HUSBAND னு சொல்ரீங்க….இங்க நல்லா பாருங்க,நீங்க இன்னரோட இருக்கலாம்,இன்னரோட இருக்கக் கூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை….இந்த விர்ஜினிட்டி எல்லாம் தனிப்பட்ட நபரோட சுதந்திரம்…உரிமை…சொல்லப் போனா எனக்கு இந்த VIRGINITY ன்ற வார்த்தை உபயோகமே கொஞ்சம் நெருடலா தான் இருக்கு.தேவை இல்லாத ஒரு விஷயம் ன்னு தோணுது….
ஆனா,VIRGINITY க்கு குடுக்கற முக்க்கியத்துவத்த உங்க படிப்புக்கும்,திறமைக்கும் குடுங்க.உங்கள வாழ்க்கைல நல்லா முன்நிறுத்திக்கோங்க…நம்ம தாத்தா பாட்டி சமுதாயம் தான் நிறைய இந்த விர்ஜினிட்டி ய வெச்சு நிறைய கொடுமையை பெண்களுக்கு பண்ணி இருக்கு….மகாராஷ்டிரா ல்ல போன வருஷம் கூட கல்யாணம் ஆன அடுத்த நாளே,அவளுக்கு ரத்தம் வரல…சோ,அவளுக்கு கன்னித்தன்மை இல்லன்னு அவ புருஷன் வெட்டிக் கொலை செஞ்சிட்டான்.
அதனால தான் சொல்றேன்.நம்ம கொண்டாட வேண்டிய விஷயம் விர்ஜினிட்டி இல்லன்னு புரிஞ்சிக்கோங்க.அது சாதாரண ஒரு திசு உறுப்பு.
இன்னும் சொல்ல போனா,இந்த ஹைமன் பத்தி பெரிய பெரிய புத்தகங்கள்ளயே தெளிவா இல்ல….எல்லாம் எழுதிட்டு கடைசியா THE MECHANISM IS NOT CLEAR ன்னு குடுத்திருவங்க….Not clear ஆ இருக்க ஒரு விஷயத்துக்காக 1300gm இருக்க மூளையை மழுங்கடிக்காதீங்க.நிறைய படிங்க.நிறைய தெரிஞ்சிக்கோங்க.
ஆண்கள்,இனிமேல் Are you a Virgin அப்டின்ற கேள்வியை முன் வெக்குறதுக்கு முன்னாடி இதை எல்லாம் யோசுச்சு பாத்துக்கோங்க?
கல்யாணம் ஆன ஒரு 5 வருஷம் கழிச்சு,எனக்கும் அவளுக்கும் கருத்து ரீதியா ஒத்து போகல ன்னு சண்டை தான் வருமே தவிர, அவ கல்யாணம் அப்போ விர்ஜின்.இப்போ விர்ஜின் இல்லைனு 5 வருஷம் கழிச்சு சண்டை வராது….ஏன் னா, வாழ்க்கைக்கு முக்கியம் புரிதல் தான்.இந்த விர்ஜினிட்டி இல்லை.சோ,நிறைய விஷயத்தை பேசுங்க;அவங்கள நல்லா புரிஞ்சிக்கோங்க!அவங்களோட உடல் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள கேட்டு தெரிஞ்சு அவங்களை அவர்களாகவே ஏத்துகிட்டு காதலிங்க.
ஏன்னா….பணம்,செய்யுற வேலை,அந்தஸ்த்து இது எல்லாமே ஒரு நாள் Saturate ஆகிடும்.
காதல் தாண்டி இந்த உலகத்துல உங்கள வேற எதுவும் உங்கள வாழ வைக்காது!
நன்றி ❤️